China Warns America about Additional Tax https://x.com/MFA_China
உலகம்

கூடுதல் வரி விதிப்பு : ட்ரம்புக்கு பாடம் எடுக்கும் சீனா

கூடுதல் வரி விதிப்புகளை எந்த பயனையும் அளிக்க போவது கிடையாது என்று, அதிபர் ட்ரம்புக்கு சீனா பதிலடி கொடுத்து இருக்கிறது.

Kannan

பிரிக்ஸ் மீது ட்ரம்புக்கு கடுப்பு :

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகள் மீது எப்போதும் கடுப்பு காட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த நாடுகள் தனிப்பட்ட கரன்சியை உருவாக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி :

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி,

பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், “ பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை பயனற்றவை. எந்த ஆக்கபூர்வமான நோக்கத்திற்கும் உதவாது.

அரசியலுக்காக வரியை பயன்படுத்துவதா? :

நாங்கள் மோதலை விரும்பவில்லை. பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பு மற்றும் உலக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

அரசியலுக்கான கருவியாக வரிகளை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். வரி விதிப்பு நடவடிக்கைகள் எந்த பலனையும் அளிக்காது. அரசியல் அழுத்தம் கொடுக்க வரி விதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

===