controversy erupted whether US President Donald Trump, secretly escaped due to a death threat from Iran AI generated
உலகம்

”ரகசியமாக தப்பிய டிரம்ப்” : 100 பேர் உயிர் பணயம் வைப்பா? : அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை, குவியும் கண்டனங்கள்...!

ஈரான் கொலை மிரட்டல் காரணமாக ரகசியமாக தப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னுடன் வந்த 100 பேரின் உயிரை பணயம் வைத்தாரா என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

Kannan

ஈரானால் டிரம்ப் உயிருக்கு ஆபத்து

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே ஈரானால் கொலை மிரட்டல் இருக்கிறது. ஆபத்தை கருதி டிரம்ப் ரகசியமாக தப்பித்தாக கூறப்படுவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாடகம் ஆடிய டிரம்ப்

ஜூலை 8ம் தேதி துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து அமெரிக்கா திரும்பினார் டிரம்ப். அவருக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனையடுத்து, பிரதான ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் டிரம்ப் ஏறுவது போல் நாடகம் நடத்தப்பட்டது.

உணவு லாரியில் பயணம்

ஆனால், கேமராக்களின் கண்களில் இருந்து தப்பிக்க, விமானத்தின் மற்றொரு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த உணவு வழங்கும் லாரி மூலமாக டிரம்ப் ரகசியமாக இறக்கப்பட்டு, அங்கிருந்து ஒரு சிறிய இராணுவ விமானத்திற்கு (C-32A jet) மாற்றப்பட்டார்.

100 பேரின் உயிர் பணயமாக வைப்பா?

டிரம்ப் ரகசியமாக வேறு விமானத்தில் தப்பிச் சென்றது தெரியாமல், அவருடன் வந்த ஏறக்குறைய நூறு பேர் (ஊடகவியலாளர்கள் மற்றும் உயர் வெள்ளை மாளிகை அதிகாரிகள்) அடங்கிய குழுவினர், டிரம்ப் இருப்பதாக நம்பப்பட்ட அதே ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலேயே தொடர்ந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்தனர்.

ஈரானை ஏமாற்றிய அமெரிக்கா

ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை ஒரு 'டிகாய்' (Decoy - ஏமாற்றும் இலக்கு) போலப் பயன்படுத்தி அதிபர் டிரம்ப் தப்பினார். அப்படி என்றால், எதிரிகளை பொருத்தவரை அந்த விமானத்தில் தான் டிரம்ப் பயணித்ததாக கருதப்பட்டது.

டிரம்ப் மீது கடும் விமர்சனம்

இதன்மூலம், தனது சொந்தப் பணியாளர்களையும் நிருபர்களையும் டிரம்ப், ஆபத்தில் சிக்க வைத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதிபர் டிரம்ப் விளக்கம்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டிரம்ப், "இது முழுக்க முழுக்க சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவத்தின் பாதுகாப்பு உத்தரவுப்படிதான் செய்யப்பட்டது.

அவர்கள் எங்கு செல்லச் சொல்கிறார்களோ அங்கு செல்வதுதான் எனது வேலை" என்றார். மேலும், தான் பயணம் செய்த மாற்று விமானத்திற்கும் ஆபத்து அதிகம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வலுக்கும் கண்டனம்

இதற்கிடையே, அதிபரை காப்பாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் அதிகாரிகளையும் ஈரானின் தாக்குதலுக்கு இரையாக்கும் வகையில் இந்தத் தந்திரம் கையாளுப்பட்டிருப்பதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

நாடாளுமன்றம் விசாரிக்க கோரிக்கை

"முன்னெப்போதும் இல்லாதது, விசித்திரமானது மற்றும் பயமுறுத்துவதாக உள்ளது" என்று கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சி செனட்டர்கள், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் முறையான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

=====================