crushing defeat in midterms, President Trump remains unperturbed, pointing he still holds power of veto source:thamizhalai,ai generated
உலகம்

"என் கையில் வீட்டோ அதிகாரம்” : அடங்காத அதிபர் டிரம்ப் : பெரும்பான்மையை இழந்த குடியரசு கட்சி, மாகாணங்களிலும் தோல்வி..!

இடைத்தேர்தலில் தனது கட்சி படுதோல்வியை சந்தித்தாலும், கவலைப்படாத அதிபர் டிரம்ப், தன் கையில் வீட்டோ அதிகாரம் இருப்பதை பதிவிட்டு பேசுபொருளாகி இருக்கிறார்.

Kannan

இடைத்தேர்தல், டிரம்ப் கட்சி படுதோல்வி

Donald Trump lost in US Midterm Elections அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தல், அதிபர் டிரம்போட ஆட்சிக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

செனட்டில் பெரும்பான்மை இழந்தது

செனட் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் புதிதாக இயற்றப்படும் சட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல் உண்டாகும். செனட்டில குடியரசு கட்சிக்கு 41 இடங்கள் மட்டும் தான் இருக்கு.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 53 இடங்களை வசப்படுத்தி, பெரும்பான்மை பெற்று இருக்கிறது.

பிரதிநிதிகள் சபையிலும் டிரம்பிற்கு பின்னடைவு

அதேபோல, பிரதிநிதிகள் சபையிலும் டிரம்ப் கட்சி பெரும்பான்மையை பறிகொடுத்து இருக்கிறது. பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவைப்படும் நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 219 இடங்கள் கிடைச்சு இருக்கு.

தேர்தலில் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அதிபர் டிரம்ப் தனக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதை குறிக்கும் வகையில், வீட்டோ என்ற வாசகத்தை கொண்ட சிவப்பு தொப்பியை பதிவிட்டு பேசுபொருளாகி இருக்கிறார்.

வீட்டோ அதிகாரம்?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இயற்றும் மசோதாக்களை நிராகரிக்க அல்லது சட்டமாக்குவதை தடுப்பதற்கு அதிபரிடம் இருக்கும் உச்சபட்ச அதிகாரமே வீட்டோ அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக்குவார். இங்கு பிரதமர் தான் ஆட்சியில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நபராக திகழ்கிறார்.

ஆனால் அமெரிக்காவில் அதிபருக்கு தான் அதிகபட்ச அதிகாரம். இவர் மசோதாக்களை திருப்பி அனுப்பலாம். கிடப்பில் போட்டு விடலாம். இரு அவைகளிலும் ஜனநாயக கட்சியினர் கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்ற விடாமல், தனது வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி அதிபர் டிரம்பால் முடக்க முடியும்.

வீட்டோவையும் மீறும் அதிகாரம்

அப்படி என்றால், அதிபர் தான் உச்சப்பட்ச அதிகாரம் மிக்கவாரா என்றால், அதுவும் கிடையாது. அதிபருக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தையும் முறியடிக்கும் வகையில் சட்டம் அமெரிக்காவில் இருக்கிறது.

ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிவிட்டால், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மீண்டும் ஆதரவாக வாக்களித்தால் வீட்டோவை முறியடித்து மசோதாவை சட்டமாக்க முடியும்.

அப்படி ஒரு சட்டமானது இருஅவைகளின் ஒப்புதலோடு கொண்டு வரப்பட்டால், அது டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும்.

======================