death toll from flash floods in Nepal has risen to 175. more than 750 people are missing. AI generated
உலகம்

நேபாள வெள்ளத்தில் ”175 பேர் உயிரிழப்பு” : 133 இந்தியர்கள் உட்பட 750 பேர் மாயம்? : மீட்பு பணிகள் மும்முரம்...!

நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் பலியானோர் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. 750க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

Kannan

பனிமலைகளில் உடைப்பு

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​களில் ஏற்பட்ட உடைப்பு பேரழிவை ஏற்படுத்தியது. இதனால், க கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் வெள்ளப்​ பெருக்கு ஏற்​பட்​டது.

கரைபுரண்ட வெள்ளம்

மலைச்​சரி​வு​களில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்​ளநீர் கிரா​மங்​கள், பாலங்​கள் மற்​றும் முக்​கிய நீர்​மின் திட்​டங்​களை கண் இமைக்கும் நேரத்தில் அடித்​துச் சென்று, வரலாறு காணாத பேரழிவை ஏற்​படுத்​தி​யது.

வெள்ளத்தின் கோர தாண்டவம்

ஆற்​றுப் படு​கையை ஒட்​டி​யுள்ள அடுக்​கு​மாடிக் கட்​டடங்​கள் நொடிப் பொழு​தில் வெள்​ளத்​தில் சரிந்து விழுந்​தன. பெரும் பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. வாகனங்கள், பொதுமக்கள் என வழியில் இருந்த அனைத்தையும், இழுத்து சென்றது வெள்ளம்.

இதுதொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

175 பேர் பலி, 750 பேர் மாயம்

வெள்​ளத்​தில் சிக்கி இது​வரை 175 பேர் உயி​ரிழந்ததாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. மேலும் காணா​மல் போன 750-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த வெள்​ளத்​தில் 9 பாது​காப்​புப் படை​யினர் மற்​றும் 60 நீர்​மின் நிலைய தொழி​லா​ளர்​கள் காணா​மல் போயுள்​ளனர்.

நேபாள சுற்​றுலா வாரி​யத்​தின்​படி,133 இந்​தி​யர்​கள் உட்​பட750 பேர் காணா​மல் போயுள்​ள​தாக தகவல் தெரிவிக்​கின்​றன.

மின் விநியோகம் முடக்கம்

ராசு​வாக​தி, சிலிமே, திரிசூலி நீர்​மின் நிலை​யங்​கள் உட்பட 6 முக்​கிய மின் உற்​பத்தி மற்​றும் பரி​மாற்ற நிலை​யங்​கள் வெள்​ளத்​தில் சேதமடைந்​த​தால் நேபாளத்​தில் மின் விநி​யோகம் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

மலைப்பகுதிகளில் நிலநடுக்கம்

நிலநடுக்​கத்​தால் பனிப்பாறைகள் உடைந்ததால், ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாகவே பெருவெள்ளம் ஏற்பட்டதாக நேபாள வெளி​யுறவுத் துறை அமைச்​சர் சிஷிர் கனால் தெரி​வித்​தார்.

தேடும் பணி தீவிரம்

காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

பிரதமர் மோடி உறுதி

நேபாள பிரதமர் பாலேந்​திர ஷாவிடம் தொலைபேசி​யில் பேசிய இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்து கொண்​டார்.

அத்​துடன், தேவை​யான அனைத்து மனி​தாபி​மான மற்​றும் மீட்பு உதவி​களை​யும் இந்​தியா வழங்​கும் என உறுதி அளித்​துள்​ளார்.

தயார் நிலையில் நிவாரண பொருட்கள்

நேபாளத்​தில் நிவாரணப் பணி​களில் ஈடுபட இந்​திய விமானப் படை​யின் சி-17 மற்​றும் சி-130 விமானங்​கள் நிவாரணப் பொருட்​கள், மருந்​துகள் மற்​றும் மண் தோண்​டும் இயந்​திரங்​களு​டன் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அவை விரை​வில் நேபாளத்​துக்கு கொண்டு செல்லப்பட்டு, மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​படுத்தப்படும்.

உதவி எண்கள் அறிவிப்பு

தலைநகர் காத்​மாண்​டு​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் அவசர தொலைபேசி எண்​களை அறி​வித்​துள்​ளது. தொலைபேசி / வாட்​ஸ்​அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்​களைத் தொடர்பு கொண்டு விவரங்​கள், உதவி​கள் பெறலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நேபாளம் சென்ற தமிழர்கள்

இதற்​கிடை​யில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்​திரைக்​குச் சென்​றனர்.

அவர்​கள் வெள்​ளத்​தில் சிக்​கி​யுள்​ளனர். அவர்​களைக் கும்​பகோணத்​தைச் சேர்ந்த சூப்​பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறு​வனம் அழைத்​துச் சென்​றுள்​ளது.

தமிழர்கள் பத்திரமாக மீட்பு

இவர்​கள் காத்​மாண்டு பகு​தி​யில் 3 வாக​னங்​களில் சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது அப்​பகு​தி​யில் திடீரென பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

இதில் ஒரு வாக​னத்​தில் சென்ற 20 பேர் தப்பி பத்​திர​மாக உள்​ள​தாக​வும், மற்ற 2 வாக​னங்​களில் சென்ற 37 பேர் வெள்​ளத்​தால் ஏற்​பட்ட நிலச்​சரி​வில் சிக்​கி, பின்​னர் மீட்​கப்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

==========