DGCA New Rules 2026 has issued statement announcing that power bank chargers will no longer be allowed on flights DGCA
உலகம்

விமானப் பயணம் இனி பவர்பேங்க் சார்ஜர் கிடையாது : டிஜிசிஏ அறிக்கை!

DGCA New Rules 2026 : வி​மானப் பயணங்​களின் ​போது பவர் பேங்க் போன்ற சார்​ஜர் சாதனங்​களை பயன்​படுத்​து​வதற்கு (டிஜிசிஏ) தடை​ வி​தித்​து பாது​காப்பு வழி​காட்​டு​தல்களுடன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Baala Murugan

டிஜிசிஏ வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

DGCA New Rules 2026 on Power Bank Ban : இது குறித்து டிஜிசிஏ​ வெளியிட்டுள்ள சுற்​றறிக்​கை​யில் விமானப் பயணி​கள் இனி பவர் பேங்​கு​களை பயன்​படுத்த அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள்.

இதில், விமான இருக்​கை​யின் அரு​கே​யுள்ள மின் பிளக்​கு​களில் பவர் பேங்கை சொருகி மொபைல்​போன், லேப் ​டாப்பை சார்ஜ் செய்​வதும் அடக்​கம். பவர் பேங்க்​கு​கள் மற்​றும் அது​போன்ற லித்​தி​யம் பேட்​டரி​களை கைப்​பைகளில் மட்​டுமே எடுத்​துச் செல்ல வேண்​டும்.

அதனை மேல்​பக்க கம்​பார்ட்​மன்ட்​களில் வைக்கக் கூடாது என்று விதி​முறை​களில் கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. லித்​தி​யம்​-அயன் பேட்​டரி​களால் ஏற்​படும் தீ விபத்​துகளை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சர்​வ​தேச விமான நிறுவனங்​கள்(DGCA Rules and Regulations in Tamil) ஏற்​கெனவே இதேபோன்ற நடவடிக்​கைகளை எடுத்துள்ளன என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் கொண்டு செல்ல தடை

பயணி​களின் இணக்​கத்தை உறுதி செய்​வதற்​கும், விமானப் பயணத்​தின்​போது பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை அதி​கரிப்​ப​தற்​கும், விமான நிறு​வனங்​கள் பயணத்​துக்கு முந்​தைய அறிவிப்பு மற்​றும் விமானப் பணி​யாளர் விளக்​கங்​கள் மூலம் இந்த புதிய தடையை அமல்​படுத்த தொடங்​கி​யுள்​ளன.

கையடக்க சார்ஜரை கொண்டு போகலாம்

அதன்​படி, விமானப் பயணி​கள் இனி கையடக்க சார்​ஜர்​களை விமானத்​தில் கொண்டு செல்லலாம். ஆனால் விமானப் பயணத்​தின்​போது அவற்றை பயன்​படுத்த முற்​றி​லும் தடை​ விதிக்கப்பட்டுள்​ளது.

விமான பயணத்திற்கு முன் சார்ஜ் - உறுதி செய்யுங்கள்

அதாவது, விமானப் பயணத்​தின்​போது தொலைபேசிகள், டேப்​லெட்​டு​கள் அல்​லது வேறு எந்த கருவி​களை​யும் சார்ஜ் செய்ய பவர் பேங்​கு​களை பயன்​படுத்த முடி​யாது என்​ப​தாகும்.

மேலும், இந்த சாதனங்​களை சார்ஜ் செய்ய அல்​லது இயக்குவதற்கு விமான இருக்​கை​யின் அருகே மின் பிளக்​கு​களை பயன்​படுத்​து​வதற்​கும் இந்த விதி பொருந்​தும். இந்த புதிய விதி​முறை மூலம் விமானப் பயணி​கள் இனி தங்​களது பயணத்​துக்கு முன்​பாக மொபைல்​போன், லேப்​ டாப்​களில் தேவை​யான அளவு சார்ஜ் இருப்​பதை உறு​தி​ செய்து கொள்​ள வேண்​டிய கட்​டா​யம்​ ஏற்​பட்​டுள்​ளது.