இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்
US, Israel Attack on Iran Update in Tamil : அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை இன்று காலை முதல் நடத்தி வருகின்றன. முதலில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்க, அடுத்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.
தலைநகர் டெஹ்ரானில் உள்ள முக்கிய நிலைகளை குறி வைத்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
நகரங்கள் மீது குண்டுமழை
இன்று காலை தொடங்கிய இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய நகரங்கள் இலக்காகின. எங்கும் வெடிச் சத்தங்கள் கேட்பதாகவும், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாவதாகவும் அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
pre-emptive strike
இஸ்ரேல் இதை முன்னெச்சரிக்கை தாக்குதல் (pre-emptive strike) என்று அழைத்து, ஈரானின் அச்சுறுத்தல்களை அகற்றவே எனக் கூறுகிறது.
major combat operations
அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருவதை உறுதிப்படுத்தி இருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Truth Social-இல் வெளியிட்ட 8 நிமிட வீடியோவில், “அமெரிக்க ராணுவம் ஈரானில் மிகப் பெரிய போர் நடவடிக்கைகளை (major combat operations) தொடங்கியுள்ளது” என்று அறிவித்தார்.
ஈரான் ஒடுக்கப்படும் - டிரம்ப் உறுதி
ஈரான் அமெரிக்காவுக்கு எதிராகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை தகர்த்து, கடற்படையை அழிப்பதே இலக்கு என்று வலியுறுத்தினார்.
ஈரானுக்கு பகிரங்க மிரட்டல்
ட்ரம்ப் வீடியோவில் ஈரானிய ராணுவத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்: “இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் போலீசுக்கு சொல்கிறேன்…
இன்று இரவுக்குள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் மரியாதையாக நடத்தப்படுவீர்கள். இல்லையென்றால் உறுதியாக மரணமடைவீர்கள்.”
ஈரானில் ஆட்சி மாற்றம்
ஈரானியர்களுக்கு “உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுங்கள்” என்று அழைப்பு விடுத்து, ஆட்சி மாற்றத்தை (regime change) வலியுறுத்தினார்.
அமெரிக்க மக்களை பாதுகாப்பதே முதன்மை இலக்கு, ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
பதிலடி கொடுக்கும் ஈரான்
ஈரான் தரப்பில் பதிலடி தாக்குதல் தொடங்கியுள்ளதாகவும், இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும் தகவல்கள் உள்ளன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளமும் ஈரான் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது.
மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து நாடுகளும் தங்கள் வான் வெளிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம்
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.
யு.ஏ.இ., சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. துருக்கி ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன
====.