துபாய் விமான கண்காட்சி
Tejas Fighter Jet Crashes During Dubai Air Show 2025 : ஐக்கிய அமீரகத்தின் துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடந்து வருகிறது. இந்த விமான சாகச நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், போர் ஜெட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
தேஜஸ் போர் விமானம் :
இந்த நிலையில், இன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், தேஜஸ் விமானமும் பங்கேற்றது. வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த விமானம், திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது. விமானம் விபத்துக்குள்ளான போது, அந்த இடத்தை தீப்பிழம்பும், கரும்புகையும் சூழ்ந்தது.
பார்வையாளர்கள் அதிர்ச்சி
விமான சாகசங்களை பார்வையிட கூடியிருந்த பொதுமக்கள் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.
விமானி உயிரிழப்பு
தேஜஸ் போர் விமானத்தை இயக்கிய விமானியும், விபத்தில் உயிரிழந்ததாக, இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உயர்மட்ட விசாரணைக் குழு
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழுவையும் இந்திய விமானப்படை அமைத்துள்ளது. தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே, 2024 இல் ஜெய்சால்மர் அருகே தேஜஸ் விமானம் விபத்தில் சிக்கியது.
====