ஆப்பிரிகாவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்
காங்கோவை ஒட்டி அமைந்துள்ள உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகள் எபோலா வைரஸ் பாதிப்பால் 80 பேர் உயிரிழந்ததை அடுத்து ,அங்கு அவசர நிலையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது
எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றா இந்த எபோலா வைரஸ் இருந்து வருகிறது . இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய வைரஸ் ஆகும்
மத்திய அரசு நடவடிக்கை
காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
எபோலா வைரஸ் எதிரொலி : பரிசோதனை கட்டாயம்
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எபோலா சிகிச்சைக்காக பிரத்யேக வார்டுகள், ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவும் முறை
குறிப்பாக இந்த எபோலா வைரசானது பழ. வௌவால்கள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள், குரங்குகள், காட்டு மான்கள் அல்லது முள்ளம்பன்றிகள் போன்ற, நோய்வாய்ப்பட்டோ அல்லது
இறந்த நிலையிலோ அல்லது மழைக்காடுகளிலோ காணப்படும் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இரத்தம், சுரப்புகள், உறுப்புகள் அல்லது பிற உடல் திரவங்களுடன் மக்கள் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது, இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது
மனிதர்களுக்கு தொற்று பரவும் முறை
காயம்பட்ட தோல் அல்லது சளி சவ்வுகள் வழியாக ஏற்படும் நேரடித் தொடர்பு மூலம், ஒருவருக்கு மற்றவரிடமிருந்து இந்த எபோலா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும்
இதனுடன் நெருங்கிய போக்குவரத்துத் தொடர்பைக் கொண்டிருப்பதால், இந்த நோய் எல்லை தாண்டி பரவக் கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
முதன்மை அறிகுறிகள்
எபோலா நோயின் அறிகுறிகள் திடீரென ஏற்படலாம். காய்ச்சல், சோர்வு, உடல்நலக்குறைவு, தசை வலி, தலைவலி மற்றும் தொண்டை வலி ஆகியவை இதில் அடங்கும். இதைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு,
வயிற்று வலி, தோல் தடிப்பு மற்றும் சிறுநீரக, கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் தோன்றும். சுகாதார மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் இந்த அறிகுறிகளைக் கண்காணிப்பது அவசியம்
அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை /தடுப்பூசி இல்லை
இது உயிரழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும் இதற்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளோ அல்லது தடுப்பூசியோ இல்லை
கட்டுப்படுத்தும் முறை
எந்தவொரு நோய்ப் பரவலையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு சமூக ஈடுபாடு மிக முக்கியமானது. நோய்ப் பரவல் கட்டுப்பாடானது, மருத்துவப் பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தொடர்புகளைக் கண்டறிதல், ஆய்வகச் சேவைகள், சுகாதார நிலையங்களில் நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான அடக்கங்கள்,
தடுப்பூசி (எபோலா வைரஸ் நோய்க்கு மட்டும்) மற்றும் சமூக அணிதிரட்டல் போன்ற பல்வேறு தலையீடுகளைப் பயன்படுத்துவதைச் சார்ந்துள்ளது என் உலக சுகாதார அமைபு தெரிவித்துள்ளது.
====================