Elon Musk launched Grokipedia to rival Wikipedia Image Courtesy : Grokipedia vs Wikipedia Logo
உலகம்

விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியா : மஸ்க் கலைக்களஞ்சியம்

Elon Musk launched Grokipedia to Rival Wikipedia : எலான் மஸ்க் விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியா என்ற கலைக் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளார்.

Kannan

வெற்றி காணும் எலான் மஸ்க்

Elon Musk launched Grokipedia to Rival Wikipedia : அமெரிக்காவின் பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க் எப்போதும் அதிரடியாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி அடைவதில் கைதேர்ந்தவர். விக்கிபீடியாவிற்கு போட்டியாக அதிநுட்பமான கலைக் களஞ்சியத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருந்தார். அதன்படி ​க்ரோகிபீடியா என்ற கலைக் களஞ்சியத்தை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறார்.

விக்கிபீடியாவை கலாய்த்த மஸ்க்

விக்கிபீடியாவையும், அதை இயக்கும் விக்கிமீடியா (Wikimedia) என்ற இலாப நோக்கற்ற அமைப்பையும் எலான் மஸ்க் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விக்கிபீடியாவை அவர் 'வோக்கிபீடியா' (Wokipedia), 'டிக்கிபீடியா' (Dickipedia) என்றும் கேலியாக கூறி வந்தார். 2023-ம் ஆண்டு, விக்கிபீடியாவின் பெயரை 'டிக்கிபீடியா' என்று மாற்றினால், அதற்கு 1 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் கூறியிருந்தார்.

எலான் மஸ்க்கின் க்ரோகிபீடியா

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ்ஏஐ நிறுவனம் மூலம் 'க்ரோகிபீடியா' (Grokipedia) என்ற புதிய ஏ.ஐ. தளத்தை உருவாக்கி உள்ளது.

எலான் மஸ்க் தொடங்கிய xAI என்னும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தின் புதிய முயற்சி. இது முழுக்க முழுக்க AI-யால் இயங்கும் ஆன்லைன் தகவல் களஞ்சியம். இது மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்தை பணம் செலுத்தி பயன்படுத்தும் பிரீமியம் வாடிக்கையாளர்களின் க்ரோக் AI சாட்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விக்கிபீடியா VS க்ரோகிபீடியா:

​விக்கிபீடியாவில் அதன் அடிப்படைக் கொள்கைதான் அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிமையாக இருக்கிறது. லாப நோக்கமற்ற அறக்கட்டளையால் இயக்கப்படும் தளம். இதன் உள்ளடக்கங்கள் உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் , மற்றும் சமூகம் மூலம் எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்படுகின்றன. இதனால் யார் வேண்டுமானாலும் புகுந்து தங்களது கருத்தை உண்மையை போல புகுத்தி விட முடியும். ஒருதலைப்பட்சமான கருத்துகள் புகுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் இருக்கின்றன.

ஆனால், க்ரோகிபீடியாவில் நினைத்த அனைவரும் சென்று தகவல்களை மாற்றி விட முடியாது. இதன் அணுகல் எளிமையாக இருப்பதில்லை.இதன் அடிப்படை தனியுரிமை கொள்கைகளும் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. சேர்க்கப்படும் தகவல்களை சரிபார்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பலமுறை சரிபார்க்கப்படுகிறது.

க்ரோகிபீடியா 0.1 பதிப்பு

தொடக்க நிலையில் இருக்கும் க்ரோகிபீடியாவின் முதல் பதிப்பு '0.1' என்ற பெயரில் நேற்று ( அக்டோபர் 27 ) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக, 10 மடங்கு சிறப்பாக இருக்கும் வகையில் வரவிருக்கும் க்ரோகிபீடியா 1.0 பதிப்பு இருக்கும். "க்ரோகிபீடியாவில் 0.1 பதிப்பு கூட விக்கிபீடியாவின் அடிப்படையை விடச் சிறந்தது தான்" என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

கடுமையான நிபந்தனைகள்

க்ரோகிபீடியா அறிமுகம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில், 8.85 லட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகளை பதிவு செய்துள்ளது.விக்கிபீடியாவைப் போல ஒரு பயனர் தான் நினைத்தபடி நேரடியாக பக்கங்களைத் திருத்த முடியாது. அவ்வாறு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் , நீங்கள் அதில் உள்ள கருத்து தெரிவிக்கும் படிவம் மூலம் பரிந்துரையை அளிக்கலாம்.

விக்கிபீடியா மீது ​விமர்சனங்களை முன்வைத்த மாஸ்க்கின் க்ரோகிபீடியா மீது பயனர்கள் எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

===============