Fake photo targeting Obama; President Trump's post sparks controversy.  google
உலகம்

ஒபாமாவிற்கு எதிரான போலி புகைப்படம் : சர்ச்சையான அதிபர் டிரம்பின் பதிவு...! : இனவெறி குறியீடு, வலுக்கும் கண்டனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி குறித்து இனவெறி குறியீடுகளை கொண்ட போலி புகைப்படத்தை அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது

Rohini

ஒபாமாவை சீண்டிய ,அமெரிக்க அதிபர்

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும்  அவரது மனைவி மிஷேல் ஓபாமாவும்  கிராஃபிட்டி ஓவியங்கள் வரையப்பட்ட ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கைகளை அசைப்பது போன்ற ஒரு போலியான புகைப்படத்தை அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பதிவிட்டு வரும் டிரம்ப்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் பராக் ஒபாமாவும்அவரது மனைவியும் காட்டில் வாழும் மனிதக் குரங்குகள் போல சித்தரித்து பதிவிட்டிருந்தார் , குடியுரிமைத் தலைவர்கள் மற்றும் குடியரசுக் கட்சி விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த பதிவு நீக்கப்பட்டது.

இருப்பினும், டிரம்ப் மன்னிப்புக் கேட்க மறுத்திருந்தார்

ஒபாமாவை தனிப்பட்ட முறையில் பொதுவெளியில் சாடி வரும் டிரம்ப்

ஒபாமா தம்பதியினரைத் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிப்பதும், ஆத்திரமூட்டும், சில சமயங்களில் இனவெறிப் பேச்சுகளைப் பயன்படுத்துவதும் டிரம்பின் நீண்டகாலப் பழக்கமாகும்.

குறிப்பாக ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்ற பொய்யைப் பரப்புவது முதல், கறுப்பினத்தவர் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் குறித்த தரம் தாழ்ந்த பொதுமைப்படுத்தல்கள், மற்றும் அவரது 'ட்ரூத் சோஷியல்' இணையதளத்தில் கோபத்தைத் தூண்டிய பதிவுகள் வரை அனைத்தும் இதில் அடங்கும்.

இருப்பினும், டிரம்ப் மன்னிப்புக் கேட்க மறுத்திருந்தார்

இத்தாலி பிரதமர் சந்திப்பு குறித்தும் போலியாக கருத்தை தெரிவித்திருந்த ட்ரம்ப்

சமீபத்தில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின்போது மெலோனி தன்னிடம் ஒரு புகைப்படம் எடுக்க 'மீண்டும் மீண்டும்' கேட்டதாகவும், அத்தகைய படத்திற்காக அவர் கெஞ்சியதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப்ன் இந்த கருத்துக்ள முற்றிலும் போலியானது கூறி மெலோனி டிரம்பின் கூற்றை நானும் இத்தாலியும் ஒருபோதும் கெஞ்சுவதில்லை” என்றார் கூறி இருந்தார்

=========================