Falcon rocket, traveling out of control, is set to crash into the lunar surface on August 5 AI generated
உலகம்

Falcon 9 Rocket : ”8,750 கி.மீ. வேகத்தில், ஃபால்கன் ராக்கெட்” : ஆகஸ்டு 5ல் நிலவின் மீது மோதல் : என்ன நடக்கும்..!

கட்டுப்பாட்டை இழந்து பயணித்து வரும் ஃபால்கன் ராக்கெட், ஆகஸ்டு 5ம் தேதி நிலவின் பரப்பில் மோத இருக்கிறது.

Kannan

விண்வெளியில் ஃபால்கன் ராக்கெட்

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஃபால்கன் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து விண்ணில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஃபால்கன் (Falcon) ராக்கெட்டின் மேல்பகுதி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் மீது மோதவுள்ளது.

'ஃபால்கன் 9' ராக்கெட்

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஃபால்கன் 9' ராக்கெட், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி நிலவை நோக்கி ஏவப்பட்டது.

இரண்டு லேண்டர்களுடன் ராக்கெட்

Firefly Aerospace-க்கு சொந்தமான 'ப்ளூ கோஸ்ட்' (Blue Ghost) மற்றும் ispace-க்கு சொந்தமான 'ரெசிலியன்ஸ்' (Resilience) ஆகிய இரண்டு லேண்டர்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.

அதில் ஒரு லேண்டர் நிலவின் மீது மோதியது. மற்றொரு லேண்டரான 'ப்ளூ கோஸ்ட்' நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இரண்டு வாரங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்ட அந்த லேண்டர், நிலவில் சூரியன் மறையும் அரிய புகைப்படத்தை எடுத்து அனுப்பிய பிறகு, ஆற்றலை இழந்து செயலிழந்தது.

பூமிக்கு திரும்பாத ஃபால்கன்

லேண்டர்களை நிலவுக்கு அனுப்பிய பிறகு, ஃபால்கன் ராக்கெட்டின் மேல்பகுதி (Upper Stage) பத்திரமாக பூமிக்குத் திரும்பாமல், விண்வெளியின் உயர்மட்டச் சுற்றுவட்டப்பாதையில் சிக்கிக் கொண்டது.

ஆயிரம் முறைக்கு மேல் ஆய்வு

பூமிக்கு திரும்பவேண்டிய இந்த ராக்கெட் எங்கு சென்றது என்பதைத் கண்டறிய விஞ்ஞானிகள் 1,053 முறை மேற்கொண்ட கண்காணிப்புப் பணிகளின் மூலம், அது பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதைகளைப் பலமுறை கடந்து சென்றது தெரியவந்தது.

நிலவின் மேற்பரப்பில் ஃபால்கன்

பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்ட அந்த ராக்கெட், தற்போது நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கி, நிலவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

4,000 கிலோ எடை

40 அடி நீளமும், 13 அடி அகலமும், சுமார் 4,000 கிலோ எடையும் கொண்ட ஃபால்கன் ராக்கெட் பாகமானது, நிலவின் 'ஐன்ஸ்டீன் பள்ளம்' (Einstein Crater) பகுதியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 1:14 மணிக்கு மோதும் என கணிக்கப்பட்டுள்ளது.

நிலவில் மோதும் ஃபால்கன்

நிலவின் மீது மணிக்கு 8,750 கி.மீ (ஒலியின் வேகத்தைப் போல 7 மடங்கு வேகம்) வேகத்தில் மோதவிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

நிலவில் ஏற்படும் மாற்றங்கள்

* பெரிய பள்ளம் உருவாகும்: மணிக்கு 8,750 கி.மீ வேகத்தில் மோதும்போது, நிலவின் மேற்பரப்பில் 65 முதல் 100 அடி வரை அகலமுள்ள மிகப்பெரிய பள்ளம் உருவாகும்.

* தூசு மண்டலம்: மோதலின் தீவிரத்தால் ஏற்படும் தூசுப் படலம் பல கிலோமீட்டர்கள் உயரத்திற்கு நிலவின் வளிமண்டலமற்ற வெளியில் பரவும்.

* சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் (Telescopes) மூலம் இந்த மோதல் நிகழ்வை பூமியிலிருந்து நேரடியாகப் பார்க்க முடியும்.

விண்வெளி குப்பைகள் - எச்சரிக்கை

ஃபால்கன் ராக்கெட் போன்று விண்வெளியில் சேரும் குப்பைகளை கவனத்துடன் அகற்றுவது மிகவும் அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

========================