First passenger train UAE desert: The journey between Fujairah and Abu Dhabi can be completed in 1 hour and 45 minutes. google
உலகம்

UAE பாலைவனத்தில், முதல் பயணிகள் ரயில் : புஜைரா to அபுதாபி, 1 மணி 45 நிமிடங்களில் அடையலாம்...

போக்குவரத்து வரலாற்றிலேயே முதல் பயணியர் ரயில் சேவை பிரமாண்ட வரவேற்புடன் ஐக்கிய அரபு எமிரேட் தொடங்கியுள்ளது

Rohini

UAE பாலைவனத்தில் பயணிகள் ரயில்

போக்குவரத்து வரலாற்றிலேயே முதல் பயணியர் ரயில் சேவை பிரமாண்ட வரவேற்புடன் ஐக்கிய அரபு எமிரேட் தொடங்கியுள்ளது

நீண்ட நாட்களுக்கு பிறகுன ரயில் சேவை

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா, புஜைரா ஆகிய ஏழு நகரங்கள் இணைக்க இதுவரை பயணியர் ரயில் போக்குவரத்து இல்லை என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது இந்த சேவையானது தொடங்யுள்ளது

மெட்ரோ, டிராம் போன்ற அந்தந்த நகரங்களுக்குள் மட்டுமே இயங்கும் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தநிலையில் ஏழு நகரங்களையும் இணைக்கும் வகையில், 2009ல் 'எத்தியாட்' ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது

முதல் பயணியர் சேவை ரயில்

இந்த திட்டத்தின் கீழ், 1,200 கி.மீ., துாரத்துக்கு ஏற்கனவே ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, சரக்கு போக்குவரத்து மட்டும் நடந்து வந்தது

இந்நிலையில், நாட்டின் முதல் பயணியர் ரயில் சேவை புஜைராவில் இருந்து அபுதாபிக்கு துபாய், ஷார்ஜா வழியாக ரயில் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது .

எளிதில் இலக்கை அடையலாம்

இந்த புதிய ரயில் சேவை மூலமாக .இதற்கு முன் புஜைரா அபுதாபி இடையேயான 250 கி.மீ., துாரத்தை, காரில் கடக்க 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும். தற்போது அறிமுகமாகியுள்ள ரயில் மூலம், 1 மணி 45 நிமிடங்களில் இலக்கை அடைய முடியும். இது பொதுமக்களின் பயண தூரத்தை எளிதாக்கு உள்ளது

====================