France and Italy Tighten Rules on Student Protests: Can Parents Be Fined for Their Children's Actions? Google
உலகம்

பிரான்ஸ், இத்தாலியில் மாணவர்கள் போராட்டம் : பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால், பெற்றோருக்கு அபராதமா..!

போராட்டத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தினால், பெற்றோர்களிடமும் இழப்பீடு வசூலிக்க பிரான்ஸ், இத்தாலி நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன

NARENDRAN K

பெற்றோர்களுக்கு நெருக்கடி :

பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் போராட்டத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால், அதற்கு அவர்களின் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டுமா

இதுதான் தற்போது பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் பேசப்படும் முக்கியமான விஷயம்.

பொதுவாக, மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம்.

ஆனால், போராட்டத்தின்போது பேருந்துகள், ரயில்கள், கடைகள் உள்ளிட்ட பொது சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் என்ன சட்டம்?

இந்தியாவிலும் பொது சொத்துகளை சேதப்படுத்தினால், 1984-ஆம் ஆண்டின் பொது சொத்து சேதத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், ஒரு மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பதற்காக மட்டும் அவரது பெற்றோருக்கு தானாகவே அபராதம் விதிக்கப்படாது. சம்பவத்தின் தன்மை மற்றும் பொருந்தும் சட்டத்தை பொறுத்தே நடவடிக்கை அமையும்.

இத்தாலியில் என்ன நடவடிக்கை?

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான அரசு, போராட்டங்களின்போது வன்முறை மற்றும் சொத்து சேதத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

சிறார்கள் பொதுச் சொத்துகள் அல்லது தனியார் சொத்துகளை சேதப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டை அவர்களின் பெற்றோரிடம் இருந்து வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் சில நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படுகிறது.

பிரான்ஸிலும் புதிய திட்டம் :

பிரான்ஸிலும் சிறார்கள் போராட்டங்களின்போது சொத்துகளை சேதப்படுத்தினால், பெற்றோரின் பொறுப்பை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடைகள், வாகனங்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு பெற்றோர்களிடமிருந்து இழப்பீடு பெறுவது இதன் முக்கிய நோக்கமாகும். ஆனால், இந்த முன்மொழிவு இன்னும் சட்டமாகவில்லை.

போராட்டத்தில் கலந்துகொண்டாலே அபராதமா?

இங்கே முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது, அமைதியான போராட்டத்தில் கலந்துகொள்வதும், போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்துவதும் ஒன்றல்ல.

பிள்ளைகள் போராட்டத்துக்கு சென்றார்கள் என்பதற்காக மட்டும் பெற்றோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது.

போராட்டங்களின்போது ஏற்படும் வன்முறையையும் சொத்து சேதத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவே பிரான்ஸ், இத்தாலி நாடுகள் பெற்றோரின் பொறுப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

=================