Free flight tickets to return home for illegal immigrants in the US, bonus of Rs. 2.41 lakh  Source : Google
உலகம்

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு "ரூ.2.41 லட்சம் பரிசு" : சொந்தநாடு திரும்ப இலவச டிக்கெட் : அமெரிக்கா அதிரடி!

US Announces $2,600 Incentive to Leave the Country : அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல இலவச திட்டத்தை உள்​துறை அமைச்​சகம் ஏற்படுத்தியுள்ளது

Rohini

சொந்த நாடு செல்ல புதிய அறிவிப்பு

US Announces $2,600 Incentive to Leave the Country : உரிய ஆவணங்​கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வசித்து வருபவர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி வந்து கொண்டு இருந்தது ,

ஆனால் தற்போது இலவச​மாக தங்​கள் நாட்​டுக்கு திரும்​பிச் செல்​வதற்​காக இந்த திட்​டத்தை அமெரிக்​கா​வின் உள்​துறை அமைச்​சகம் அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலின் புகைப்படம் ,சர்ச்சை ?

சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் திட்​டத்​துக்​கான அறி​விப்​பில் தாஜ்மஹாலின் புகைப்​படத்தை அந்தத் துறை பயன்​படுத்​தியிருக்கிறது.

இந்த திட்டத்தை வரவேற்​கும் சிலர், தாஜ்மஹால் புகைப்​படத்தை இந்தத் திட்​டத்​துக்​கான அறி​விப்​பில் அச்​சிட்​டது ஏன் என்​றும் கேள்வி எழுப்​பி வருகின்றனர்

இது குறித்த அமெரிக்க உள்​நாட்​டுப் பாது​காப்​புத் துறை பதிவு

இதுகுறித்து அந்நாட்டு அரசு சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது நீங்​கள் ஒரு புதிய தொடக்​கத்​துடன் உங்​கள் தாய்​ நாட்​டுக்கு செல்​லலாம்.

சிபிபி ஹோம் என்ற செல்​போன் செயலியைப் பயன்​படுத்தி நீங்​களாகவே உங்​கள் நாட்​டுக்கு செல்ல முன்​வரும் போது இலவச விமான டிக்​கெட் மற்​றும் வெளியேறு​வதற்​கான 2,600 அமெரிக்க டாலர்​கள் சுமார் ரூ.2.41 லட்​சம் போனஸ் தொகை​யைப் பெற்​றிடுங்​கள் என்று குறிப்பிட்டுள்​ளது.

ஏன் இந்த தீடிர் முடிவு

உடனடியான இந்த திட்டத்திற்கு காரணமாக அந்நாட்டு அரசு சில விளக்கங்களை முன்வைத்துள்ளது ,அதில் அமெரிக்​கா​வில் ஆவணமின்றி சட்​ட​விரோத​மாகத் தங்​கி​யிருப்​போரை கண்​காணிப்​ப​தற்​கான செல​வு​களைக் குறைப்பதற்காகவும் ,

காவல், நீதித்​துறை அமைப்​பு​களின் மீதான அழுத்​தத்​தைக் குறைக்​க​வும், அதே நேரத்​தில் முறை​சார்ந்த நாடு கடத்​தலுடன் தொடர்​புடைய சட்​டரீ​தி​யான தண்​டனை​களைத் தனி நபர்​கள் தவிர்க்​க​வும் இந்​தத் திட்​டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர்.