இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை :
French President on Palestine State : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. ஹமாசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல்(Israel Palestine War) தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2 வாரங்களில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்கள் அப்பாவி குழந்தைகளை பலிவாங்கி இருக்கின்றன. பால் இன்றி பச்சிளங் குழந்தைகள் மடிவது, உணவு, தண்ணீர், மருந்து கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். உயிரிழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
பாலஸ்தீனத்தின் உரிமைக்குரல் :
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. பாலஸ்தீனத்துடன் நட்பு பாராட்டும் நாடுகளும் தனிநாடு விவகாரத்தில் ஒதுங்கி நிற்கின்றன. இந்த நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க தயார் என்று பிரான்ஸ்(France on Palestine) பகிரங்கமாக அறிவித்து இருக்கிறது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பிரான்ஸ் :
இதுகுறித்து பற்றி பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்(Emmanuel Macron), ”மத்திய கிழக்கில் அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டை கொண்டு வரும் வகையில், பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும்(France Recognize Palestine Date). செப்டம்பரில் நடைபெறும் ஐநா. பொதுச்சபை கூட்டத்திற்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிடுவேன். காசாவில் போரை(Gaza War) முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவே முன்னுரிமை தரப்படும்.
இஸ்ரேலுக்கு பிரான்ஸ் அறிவுரை :
பாலஸ்தீனம் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்து பிணை கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க வேண்டும். பாலஸ்தீன அரசை வலுப்படுத்த வேண்டும். அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதே பிரான்ஸ் மக்களின் விருப்பம் “ இவ்வாறு அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.
பிரான்சுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு :
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் அறிவிப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரான்சுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ இந்தப்போக்கு ஆபத்தானது மற்றும் தவறானது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பது போன்றது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை. இதை பிரான்ஸ் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க : ’இந்தியர்களை’ வேலைக்கு எடுக்கக் கூடாது : அதிபர் ட்ரம்ப் மிரட்டல்
பிரான்ஸ் அரசுக்கு பாலஸ்தீனியர்கள் பாராட்டு :
அதேநேரத்தில் பாலஸ்தீனத் தலைவர்கள் பிரான்சின் ஆதரவை வரவேற்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடு பிரான்ஸ். 140 க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன என்று அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
==============