Heatwave grips Europe: over 1,400 deaths, normal life disrupted, red alert issued.  google
உலகம்

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை : 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, இயல்பு வாழ்கை முடக்கம் : சிவப்பு எச்சரிக்கை...!

பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்

Rohini

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை

பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை அலர்ட்

பாரிஸ் நகரில் 40.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியது. குறிப்பாக நாட்டின் மற்ற பகுதிகளில் வெப்பம் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளன, இந்த தீவிர வெப்ப அலையால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தீவிர சிகிச்சையில் மக்கள், 1400க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு

ஐரோப்பாவை வாட்டும் இந்த கடுமையான வெப்பத்தால் மருத்துவமனைகளில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ,கடுமையான வெப்ப அலையால் கடந்த இரு நாள்களில் 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

65 வயதிற்கும் அதிகமானோரை பாதிக்கும் வெப்ப அலை

வழக்கமான வெப்ப அலையை விட இந்த ஆண்டின் வெப்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

இந்த வெப்ப அலையால் அதிகமாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த வெப்ப நோய்களால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுளள்து

மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதித்துள்ளன. குறிப்பாக பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி,ஜெர்மனி,கிரீஸ்,டென்மார்க் நாடுகளிலும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

=======================