heatwave intensifies in European countries, the death toll has crossed 10,000 AI generated
உலகம்

"Super" El Niño : ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலை “10,000 கடந்த உயிரிழப்பு” : வயதானவர்கள் பெரிதும் பாதிப்பு...!

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை தீவிரம் அடைந்து இருப்பதால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.

Kannan

சூப்பர் எல் நினோ

சூப்பர் எல் நினோ தாக்கம் காரணமாக, உலக அளவில் வெப்பநிலை அதிகரித்து இருக்கிறது. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் மழை அளவு குறைந்து, வறட்சி நிலவுகிறது.

ஐரோப்பாவில் வெப்ப அலை

அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை தீவிரம் அடைந்து இருக்கிறது. அசாதாரண உயிரிழப்புகள், உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தால் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

10 ஆயிரம் பேர் உயிரிழப்பு

தீவிர வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஜூன் மாத இறுதியில் இருந்து ஐரோப்பிய கண்டத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது.

உச்சத்தில் வெயிலின் கொடுமை

பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் வெயில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் கடுமையான வெப்ப அலை வீசியது.

இதனால் பல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், மின்சாரம் தடைப்பட்டது மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்களும் சேதம் அடைந்தன.

ஜெர்மனியில் அதிக உயிரிழப்பு

அதிகபட்சமாக, ஜெர்மனியில் மட்டும் 5 ஆயிரத்து 120 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 2 ஆயிரத்து 700 பேரும், பிரான்ஸில் 2 ஆயிரம் பேரும், பெல்ஜியத்தில் ஆயிரத்து 700 பேரும், ஸ்பெயினில் ஆயிரம் பேரும் மரணம் அடைந்தனர்.

வயது முதிர்ந்தோர் அதிகமாக மரணம்

இறந்தவர்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 65 வயதை கடந்தவர்கள் என்றும், கொரோனாவின் தாக்கமும் இதற்கு முக்கிய காரணியாக இருக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில மாதங்கள் வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால், ஐரோப்பாவும் வறட்சியின் பிடியில் சிக்கும் நிலை உருவாகும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே, நீர்நிலைகள் வற்றி வருகின்றன. புனல் மின்சாரம் ஸ்தம்பித்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

=================