ICC Women's T20 World Cup: Australian team clinches the championship title. google
உலகம்

ஐசிசி மகளிர் டி20 கோப்பை : சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற ஆஸ்திரேலியா : 7வது முறை கோப்பையை கைப்பற்றி சாதனை...!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன்

Rohini

ஐசிசி மகளிர் டி20 ,ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

ஒரு போட்டியில் கூட தோற்காமல் கவனம் பெற்ற மகளிர் அணி

இந்த தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஆஸ்திரேலியா கோப்பையை வென்று அசத்திய மகளிர் அணி என்ற சிறப்பை பெற்றுள்ளது

முதலில் களமிறங்கி வெற்றியை பதிவு செய்த அணி

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் சாதகமாக இல்லை என்றாலு இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சோபி மோலினக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் , அந்த ஆட்டம் கைகுடுக்காத நிலையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் நாட் சீவர் பிரண்ட் 53 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அசத்தினார்.

7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ஃபிரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது போட்டியை தக்க வைத்து கொண்டனர்

ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த மூனி, 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். இவர்களின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவர்களிலேயே 153 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

====================