Impact of prolonged war: Crude oil prices surge—a sharp 10% rise.  Ai generated
உலகம்

நீடிக்கும் போர் எதிரொலி : எகிறியது கச்சா எண்ணெய் விலை 10% கிடுகிடு உயர்வு...!

ஈரான் அமெரிக்க இடையே மீண்டும் ஏற்ப்பட்டுள்ள தொடர் தாக்குதலால் , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது ஓரே நாளில் 10% அதிகரித்துள்ளது.

Rohini

மீண்டும் தொடங்கிய போர்

100 நாடக்ளுக்கு மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க இடையேயான போர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது ,

இந்த நிலையில் அமெரிக்காவின் அணுஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத காரணத்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ,அமைதி ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இது மேற்காசிய நாடுகளில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது

தொடர் தாக்குதலில் ஈரான் அமெரிக்கா

இந்த நிலையில் ஈரானும் , அமெரிக்காவும் மீண்டும் தொடர் தாக்குதலை தொடங்கியுள்ளன. இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதலை நடத்தி வருகின்றன .இதனால வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழக் நிலவியுள்ளது

போர் எதிரொலி: எகிறிய கச்சா எண்ணெய் விலை

இரு நாடுகளுக்கும் இடடையே நீடித்து வரும் போர் பதற்ற சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எகிறியுள்ளது

ஒரே நாளில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று ஒரே நாளில் சுமார் 10% உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடுவதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.62% உயர்ந்து ஒரு பேரல் 83.32 டாலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் விலை 9.4% உயர்ந்து ஒரு பேரல் 78.14 டாலர் ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி

நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது ,கடந்த 2 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 13.48% உயர்ந்துள்ளது.

எரி்பொருள் பற்றாக்குறை

அமைதி ஒப்பந்தத்திற்கு முன்பு நீடித்த போர் பதற்ற சூழலால் , உலகளவில் எரிப்பொருளுக்கான பற்றாக்குறை உச்சத்தில் இருந்தது.

இது உலக வணிகம் மற்றும் இயல்பு வாழ்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த்து , இந்த் நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை எகிறியிருப்பது குறிப்பிடத்தக்கது

ஹோர்மூஸ் 20% கட்டணம், டிரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

ஹோர்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாகவும் , அந்த வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கட்டணமாக 20 % வசூலிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பி்ற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் பதிலடி தந்துள்ளார்.

======================