Indian man bought lottery ticket in Dubai based on his mother's birthday number , won 240 crores Image Courtesy : UAE Lottery
உலகம்

’அம்மாவின் பிறந்த நாள்’ பரிசு 240 கோடி : இந்தியருக்கு ஜாக்பாட்

Indian Expat Wins UAE Lottery Worth 240 Crore : அம்மாவின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து வாங்கிய துபாயில் லாட்டரி டிக்கெட் வாங்கிய இந்தியருக்கு 240 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

Kannan

இந்தியாவை சேர்ந்தவருக்கு பரிசு

Indian Man Chose Mother's Birthday As Lottery Number, Wins Rs 240 Crore : யுஏஇ லாட்டரியின் ( UAE Lottery ) குலுக்கல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது இதில் முதல் பரிசு பெற்றவரின் விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்தியாவைச் சேர்ந்த 29 வயதான அனில் குமார் பொல்லாவுக்கு ரூ.240 கோடி முதல் பரிசாக கிடைத்திருக்கிறது. அபுதாபியில் நடந்த விழாவில் அவர் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டார்.

240 கோடி பரிசு

பின்னர் பேட்டியளித்த அனில் குமார், “ 18 மாதங்களாக அபுதாபியில் பணியாற்றி வருகிறேன். லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவது எனது பழக்கம். அண்மையில் யுஏஇ லாட்டரியின் 12 டிக்கெட்டுகளை வாங்கினேன். இதில் கடைசி டிக்கெட்டை எனது அம்மாவின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்து வாங்கி இருந்தேன். அதற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது.

கனவுகளை நிறைவேற்றுவேன்

240 கோடி பரிசாக விழுந்து இருக்கிறது. எனக்கு கிடைக்கும் தொகையில், விலையுயர்ந்த காரை வாங்க இருக்கிறேன். இந்தியாவில் உள்ள பெற்றோரை இங்கு அழைத்து வந்து, வாழ இருக்கிறேன். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன். சில தான தர்மங்களை செய்யவும் திட்டமிட்டு உள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க : நவம்பர் 4 ஆம் தேதி 'சாட்ஜிபிடி கோ' இலவசம் - ஓப்பன் ஏஐ அதிரடி!

அம்மா பிறந்தநாள் பரிசு

அனில் குமார் கடைசியாக வாங்கிய லாட்டரியில் உள்ள கடைசி எண் அவரது அம்மா பிறந்தநாள் எண்ணாகும். இந்த அதிர்ஷ்ட எண் தான் தன்னை கோடீஸ்வரனாக்கி இருப்பதாக அனில் குமார் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

====