Indian-origin astronaut Anil Menon is heading to the International Space Station AI generated
உலகம்

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் ”இந்திய வம்சாவளி அனில் மேனன்” : ஜூலை 14ல் வெற்றிப் பயணம் : 8 மாதங்கள் ஆய்வு...!

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன், 8 மாதங்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்கிறார்.

Kannan

சர்வதேச விண்வெளி மையம்

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. அங்கு பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்திய வம்சாவளி அனில் மேனன்

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மனியாபோலிஸ் நகரில், இந்திய மற்றும் உக்ரைன் குடியேறி பெற்றோர்களுக்கு பிறந்தவர் அனில் மேனன். மருத்துவம், ராணுவம் மற்றும் மனித விண்வௌி பயணம் ஆகியவற்றில் பல்வேறு புரிந்துள்ளார்.

விமானப்படை வீரர்

அமெரிக்க விமான படையில் பணியாற்றியபோது, ஆபரேஷன் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாசாவில் கடந்த 2014ம் ஆண்டு தனது பணியை தொடங்கிய அனில் மேனன், சர்வதேச விண்வௌி நிலையத்தில் பணியாற்றும் விண்வௌி வீரர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.

மனைவியும் விண்வெளி வீராங்கனை

அனில் மேனனின் மனைவி அன்னா வில்ஹெல்மும் ஒரு விண்வௌி வீராங்கனை ஆவார். இவர் 2024ல் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் 5 நாட்கள் பயணித்து சாதனை படைத்தவர்.

இந்நிலையில், அனில் மேனன் வரும் 14ம் தேதி தனது முதல் சர்வதேச விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளார்.

முதல் விண்வெளி பயணம்

ரஷ்ய விண்வௌி வீரர்களான பியோத்தர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் 49 வயதான அனில் மேனன் கஜகஸ்தானில் உள்ள பைக்னோனூர் விண்வௌி ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம்எஸ்-9 விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள அனில் மேனன் தயாராகி வருகிறார்.

விண்வெளி மையத்தில் 8 மாதங்கள்

8 மாதகாலம் விண்வௌி நிலையத்தில் தங்கவுள்ள அனில் மேனன், நீண்டகால விண்வௌி பயணத்தால் ஏற்படும் உடலியல் பாதிப்புகள், விண்வௌியில் மனித ரத்த ஓட்டம், திசுக்கள் வளர்ச்சி உள்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளார்.

ரோட்டரி சங்க நிர்வாகியாக சில காலம் இந்தியாவில் தங்கி போலியோ ஒழிப்பு திட்டப் பணிகளிலும் அனில் மேனன் ஈடுபட்டுள்ளார்.

===============