விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயற்சி :
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஃப்ளைதுபாய் விமான சம்பவத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்டன் சுமித் மிச்சார் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.
விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையை திறமையாக கையாண்டு 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக கூறப்படும் அவரது நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃப்ளைதுபாய் விமானத்தில் எதிர்பாராத சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது மற்றோரு விமானியனா ஓமான் நாட்டையோ சேர்ந்த விமானி திடீரென சுமித் மிச்சரை தாக்க தொடங்கி விமானத்தை கீழ் நோக்கி இயக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது எனவே இந்த செயல் அங்கு இருந்த பயணிகளின் கவனத்துக்கு வர அவர்களில் ஒருவர் சுமித் மிச்சருக்கு உதவிக்கு சென்று அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுத்து விமானத்தை சீரான நிலைக்கு கொண்டுவந்தனர்
இந்த நிலையில், காயமடைந்த போதிலும் கேப்டன் சுமித் மிச்சார் அமைதியை இழக்காமல் விமானத்தின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரநிலை தீவிரமடைந்த நிலையில், விமானத்தை சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்திற்கு திருப்பிச் செல்ல முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அதில் பயணித்த 172 பேரும் எந்த பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் சுமித் மிச்சாரின் தைரியத்தை பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடுமையான சூழ்நிலையிலும் தனது கடமையை சிறப்பாக நிறைவேற்றியதற்காக அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதிலிருந்து சமூக வலைதளங்களில் SumitMichaar என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
பலரும் அவரை "இந்தியாவின் பெருமை" என்றும், "174 உயிர்களைக் காப்பாற்றிய ஹீரோ" என்றும் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
விமானப் பாதுகாப்பு நிபுணர்களும், நெருக்கடியான சூழ்நிலைகளில் பைலட்டுகளின் மன உறுதியும் பயிற்சியும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியர்கள் மட்டுமல்லாமல் இஸ்ரேல் மக்களும் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்
பொதுவாக விமானப் பயணங்களில் பைலட்டுகளின் பணி பயணிகள் கண்களுக்கு தெரியாமல் போய்விடும்.
ஆனால் இந்த சம்பவம், ஒரு பைலட்டின் சரியான நேர முடிவும் தைரியமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை உலகிற்கு நினைவூட்டியுள்ளது.
==================