Iran announced it carried out missile attack on Israeli Prime Minister Benjamin Netanyahu office google
உலகம்

Israel Iran War : இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் : நெதன்யாகு நிலை என்ன! : ஐரோப்பாவில் பதற்றம்

Israel Iran War IRGC Claims Missile Attack at Israeli PM Netanyahu Office : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்து இருக்கிறது.

Kannan

உக்கிரமான சண்டை

Israel Iran War IRGC Claims Missile Attack at Israeli PM Netanyahu Office : ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய வரும் போர் 3வது நாளாக இன்றும் உக்கிரமான கட்டத்தை எட்டி வருகிறது. ஏவுகணைகள், குண்டு வீச்சுகள் மூலம ஈரானை இருநாட்டு படைகளும் சின்னாபின்னமாக்கி வருகின்றன.

பதிலடி கொடுக்கும் ஈரான்

இதற்கு பதிலடி கொடுப்பதில் ஈரானும் சளைக்காலம், ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து கடற்படை தளங்கள், போர்க் கப்பல்கள் மீது சரமாரி தாக்குதல் தொடுத்து வருகிறது.

அமெரிக்க நட்பு நாடுகள் பாதிப்பு

அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் ஈரான் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.

இந்த நாடுகளில் விமான நிலையங்கள் மூட்டப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதால், என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் பேரும் அச்சத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்கு

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு நிகழ்களும் தடைபடும் சூழல் உருவாகி இருக்கிறது. ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

தீவிரவாதிகளை குறி வைத்து அழிப்பதாக கூறினாலும், அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகள் தான் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தாக்குதல்

இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.

விமானப்படை தாக்குதல் நடத்தியதில் நெதன்யாகுவின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை என்று தெரிவித்த ஈரான் ராணுவம், விமானப் படை தளபதி அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளனதாக தெரிவித்துள்ளது.

ட்ரோன் தாக்குதலில் ஈரான்

துபாய், தோஹா, அபுதாபி மீது ஈரான் ராணுவம் டிரோன் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. சைப்ரஸில் உள்ள இங்கிலாந்தின் படைத்தளம் மீதும், ஐக்கிய அரபு அமீரகம் மீதும் 500க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஏவி தாக்குதல் துல்லியமாக நடத்தி இருக்கிறது ஈரான்.

பேச்சுவார்த்தை இல்லை - ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கும் ஈரான், கமேனி படுகொலைக்கு பழிவாங்க தாக்குதலை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

====