Iran Drone Attack: Dubai Airport Closed! source : google
உலகம்

ஈரான் ட்ரோன் தாக்குதல் : துபாய் விமான நிலையம் மூடல்! : மக்கள் பதற்றம்

Iran Drone Attack: Dubai Airport Closed!: துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல்

S Kavitha

Iran Launches Drone Attack Targeting Oil Depot Near Dubai Airport

துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர்

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசிய நாடுகள் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

துபாய் விமான நிலையம் அருகே தாக்குதல்

இந்நிலையில் துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

எண்ணெய் கிடங்கில் தீ

இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கில் தீப்பற்றி எரிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தாக்குதலில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

கட்டுக்குள் வந்த நிலைமை

சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்பு குழுக்கள் விரைந்த நிலையில், தற்போது நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எமிரேட்ஸ் முக்கிய அறிவிப்பு

துபாய் விமான நிலையம் மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து எமிரெட்ஸ் விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பை அறிவித்திருந்தது.

விமானங்கள் ரத்து

அதன்படி துபாயில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் மற்றும் துபாய்க்கு வந்து சேரும் அனைத்து விமானங்களையும் எமிரெட்ஸ் விமான நிறுவனம் ரத்து செய்து உள்ளது.

ஈரான் திடீர் தாக்குதல்

ஈரானின் திடீர் தாக்குதலால் எமிரெட்ஸ் விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்ற விமானங்கள் மீண்டும் திரும்பி வந்தன.

ஈராக்கிலும் ஈரான் தாக்குதல்

துபாய் விமான நிலைய தாக்குதலைப்போலவே, ஈராக்கின் தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலும் ஈரான் ட்ரோன் மற்றும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலானது அங்குள்ள அமெரிக்க தூதர அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் போது ஐந்து பேர் காயமடைந்தனர்.

===