Flydubai விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக ஈரான் மீது மறைமுக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அதற்கு ஈரான் அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
விமான சதி முயற்சியோ, அதில் தொடர்புடைய நபர்களோ தங்களுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், விமானத்தில் நடந்த சம்பவத்திற்கும் ஈரான் அரசுக்கும், ஈரான் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அல்லது ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக ஈரான் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அந்நாட்டு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
Flydubai விமான சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சில மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வெளியாகின.
குறிப்பாக விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்ததால், இதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கிறதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.
ஆரம்பத்தில் ஒரு விமான பாதுகாப்பு சம்பவமாக பார்க்கப்பட்ட இந்த விவகாரம், தற்போது சர்வதேச அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த சம்பவமும் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
தற்போது சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
விசாரணையின் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை எந்த நாட்டையும் அல்லது அமைப்பையும் குற்றவாளியாக சுட்டிக்காட்ட முடியாது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஈரான் நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் மேலும் அரசியல் முக்கியத்துவம் பெறலாம் என்று கருதப்படுகிறது.
விசாரணை எந்த திசையில் செல்கிறது, புதிய ஆதாரங்கள் வெளியாகிறதா என்பதையே தற்போது உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
======================