Iran sparked controversy by putting billboard depicting US President Donald Trump inside a coffin AI generated
உலகம்

”சவப்பெட்டிக்குள் டிரம்ப் படம்” : வம்புக்கிழுக்கும் ஈரான்..: தீவிரமடையும் போர், வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சவப்பெட்டிக்குள் இருப்பது போன்ற விளம்பர பலகையை வைத்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறது ஈரான்.

Kannan

ஈரான் - அமெரிக்கா போர்

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு, ரத்து செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து, ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்து வருகிறது.

கச்சா எண்ணெய் சப்ளை பாதிப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாக சரக்கு கப்பல்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால், மீண்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பதால், உலக நாடுகள் அதிர்ச்சியில் அடைந்துள்ளன. பொருளாதாரப் பிரச்னைகளும் தலை தூக்கித் தொடங்கி விட்டன.

டிரம்பை விமர்சித்து விளம்பர பலகை

அதிபர் டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை மோசமாக விமர்சித்து, ஈரான் மிகப்பெரிய விளம்பரப் பலகையை பொது இடத்தில் வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தன்னைக் கொல்ல முயற்சி செய்யக்கூடும் என்று டிரம்ப் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில், விளம்பர பலகை வைத்து வம்புக்கு இழுத்து இருக்கிறது ஈரான்.

'டிரம்ப்பைக் கொல்லுங்கள்'

'ட்ரம்ப்பைக் கொல்லுங்கள்' சுவரோவியம் வரையப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. தலைநகர் டெஹ்ரானின் (Tehran) எங்கேலாப் சதுக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திறந்த சவப்பெட்டிக்குள் இறந்தது இருப்பது போன்று இந்த விளம்பரம் இடம்பெற்று இருக்கிறது.

"We Kill Trump" மற்றும் "We Will Kill Trump" என்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும், மற்றொரு சுவரோவியத்தில் டிரம்பின் குடும்ப உறுப்பினர்கள் சவப்பெட்டிகளுக்கு மேல் இருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மினாபின் குழந்தைகளின் நினைவாக

விளம்பரப் பலகையின் கீழே, ’மினாபின் குழந்தைகளின் நினைவாக’ என்றும் எழுதப்பட்டுள்ளது. போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28ம் தேதி ஈரானின் நகரமான மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறிக்கிறது.

120 சிறுமிகள் பலி

இந்தத் தாக்குதல்களில் 120 சிறுமிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அலி கமேனியின் இறுதிச் சடங்குகளின் போதும், ​​'அமெரிக்காவுக்கு மரணம்' என்ற முழக்கங்களும், 'ட்ரம்ப்பைக் கொல்' என்ற பிரம்மாண்டமான சுவரொட்டிகளும் ஈரானிய நகரங்கள் முழுதும் ஒட்டப்பட்டு இருந்தன.

தீவிரம் அடையும் போர்

ஈரான் மீது தினமும் 7 மணி நேரம் தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்த பிறகு 5வது நாளாக நேற்றும் தாக்குதல் தீவிரமாக இருந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் தொடுத்தது.

====