Iran-US Ceasefire: Trump's Announcement – ​​A Move That Confuses the World? google
உலகம்

ஈரான் - அமெரிக்க போர் நிறுத்தம் : டிரம்ப் மீண்டும் அறிவிப்பு : உலக நாடுகளை குழப்பும் நடவடிக்கையா..!

மத்​திய கிழக்கு நாடு​களின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

Rohini

மீண்டும் போர் நிறுத்தம் அறிவிப்பு , டிரம்ப் அறிவிப்பு

ஈரான் அமெரிக்க இடையே போர் ஒப்பந்தம் அமைதி உடன்பாட்டை எட்டிய நிலையிலும், ஹோர்மூஸ் வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தியது , இதனால் அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதாக அமெரிக்க அறிவித்தது , இது வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது உலக் நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியது ,

இந்த சூழலில் மத்​திய கிழக்கு நாடு​களின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க முழுவீச்சில் இருக்கிறது அமெரிக்கா

இந்த அறிவிப்பு குறித்து டிரம்ப் தனது பதிவில் , இரண்​டாம் உலகப்​போருக்கு பிறகு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக ஈரான் உரு​வெடுத்​திருக்​கிறது.

அந்த நாட்டு ராணுவம், தீவிர​வாத அமைப்பு போன்று செயல்​படு​கிறது. ஈரானுக்கு எதி​ரான போருக்கு அமெரிக்கா முழு​வீச்​சில் தயா​ராக இருக்கிறோம்

எனினும், போரை நிறுத்​து​மாறு ஈரானும், மத்​திய கிழக்கு நாடு​களும் கோரிக்கை விடுத்​துள்​ளன.

இதன்​மூலம் அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த முடி​யும் என்று அந்த நாடு​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றன.

இதை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​வதாக தெரிவித்திருக்கிறார்,

மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி முழு​மை​யாக திறக்​கப்பட வேண்​டும். ஈரானின் அணு ஆயுத அச்​சுறுத்​தலுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்​ப​தில் அமெரிக்கா உறு​தியாக உள்​ளது என்றும் தெரிவித்திருக்கிறார்

இரு நாடுகளின் தீவிர தாக்குதல்

அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜூலை 13-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்​டும் தாக்​குதலை தொடங்​கியது. ஈரானின் ராணுவ தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்​கு​கள், உள்​கட்​டமைப்​பு​களை குறி​வைத்து அமெரிக்க ராணுவம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இதற்கு பதிலடி​யாக ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபி​யா, குவைத், ஜோர்​டான் உள்​ளிட்ட நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தீவிர தாக்​குதல்​களை நடத்​தி​யிருந்தது , இது வளைகுடா நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது

உல நாடுகளை குழப்ப திட்டமா?

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதற்கு முன்னரே ஈரானும் அமெரிக்காவும் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுப்பட்டிருந்து அதை மீண்டும் ரத்து என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளை குழப்பதில் ஆழ்த்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன

=============================