Iran and US exchange attacks; Trump issues warning; Indian Ministry of External Affairs condemns the situation. google
உலகம்

போர் ஒப்பந்தம் ரத்து : தொடர் தாக்குதலில் ஈரான்-அமெரிக்கா : எச்சரிக்கை விடுத்த டிரம்ப், இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

அமைதி ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, ஈரான் - அமெரிக்கா தாக்குதல் உக்கிரமடைந்து இருக்கிறது.

Rohini

போர் ஒப்பந்தம் ரத்து

100 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க போர் ஒப்பந்தமானது கையெழுத்தாகியிருண்டஹ் நிலையில் , அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் ஒப்த்துழைக்காததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிருத்தி கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்

ஈரானுக்கு சவால் விடுக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை படு​கொலை செய்ய ஈரான் புது திட்​டம் வகுத்​துள்​ள​தாக இஸ்​ரேல் எச்​சரிக்கை விடுத்​த​தாக 2 நாட்​களுக்கு முன்​னர் தகவல் வெளி​யானது.

இந்த நிலையில் ,ஈ​ரான் என்னை கொலை செய்ய முயன்​றால் அந்​நாட்​டின் மீது பயங்கர தாக்​குதல் நடத்த 1,000 ஏவு​கணை​கள் தயார் நிலை​யில் உள்​ளன” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

உறுதி செய்த ஈரான் அரசு

இதை உறுதி செய்​யும் வகை​யில் ஈரான் முன்​னாள் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி​யின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​றவர்​கள், ட்ரம்ப்பை கொல்​வோம் என்ற பேனருடன் ஊர்​வலம் சென்​றனர்.

ஒப்பந்தத்தை மீறியதால் தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் குறிப்பிட்ட வழித் தடத்தில்தான் எண்ணெய்க் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும், ஓமன் கடற்கரை வழியாக கடந்து செல்லக் கூடாது என்று ஈரான் ஒப்ப்ந்தம் மூலமாக ட்டுப்பாடுகள் விதித்தது.

ஈரான் உத்தரவை மீறி ஓமன் கடற்கரை வழியாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 3 எண்ணெய்க் கப்பல்களைக் கடந்த வாரம் ஈரான் தாக்கியது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்

ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக , ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.

இந்த பதற்றமான சூழ்நிலையில், கச்சா எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஈரான் தூதரை அழைத்து ஓமன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வெளியுறவுத்துறை கண்டனம்

சர்வதேச விதிமுறைகளின்படி வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பது கட்டாயமான் ஒன்று , இதை உடனடியாக நிறுத்த வேண்டும். சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அப்போதுதான் இப்பகுதியில் அமைதி ஏற்படும். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

===================