Iran-US war agreement coming to an end: US condition—no tolls to be collected in the Strait of Hormuz.  google
உலகம்

”முடிவுக்கு வருகிறது ஈரான் அமெரிக்க போர்” : ஹோர்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலிக்க கூடாது : அமெரிக்கா நிபந்தனை

100 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க போரனது தற்போது முடிக்கு வருவதாக் அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்

Rohini

கையெழுத்தானது அமைதி ஒப்பந்தம்

100 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க போரனது தற்போது முடிக்கு வருவதாக் அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்

வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படும்

அமைதி பேச்சுவாரத்தை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான நிலையில் , லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும் இந்த ஒப்பந்தம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படுவதற்கும் உறுதியளித்துள்ளது

தொடர்ந்து சிக்கலில் நீடித்து வந்த ஒப்பந்தம் கையெழுத்தானது

தொடர் தீவிர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை தற்போது இறுதி செய்துள்ளது . இரண்டு தரப்பும் உடனடியாக ராணுவ ரீதியான நடவடிக்கையை நிறுத்தி கொள்வதாகவும் .

வரும் 19-ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இறுதி ஒப்பந்த முடிவு : துணையாக இருந்த வளைகுடா நாடுகள்

ஈரான அமெரிக்க பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்ததிற்கு உறுதுணையாக இருந்த வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, துருக்கி நினைவுகூர்ந்து உள்ளார்ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வளைதள பகத்தில் தெரிவித்துள்ளதாவது

இரு நாடுகளுக்கான் அமைதி ஒப்பதம் குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கதில் தெரிவித்துள்ளதாவது பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைதி ஒப்பந்தம் இறுதியானதை உறுதி செய்தார்.

“ஈரான் இஸ்லாமிய குடியரசு நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள். உலக நாடுகளின் கப்பல்கள் அதன் என்ஜினை ஸ்டார்ட் செய்யலாம். ஹார்முஸ் ஜலசந்தியை கட்டணமின்றி கடக்கலாம். அதே நேரத்தில் அமெரிக்க கடற்படை முற்றுகை திரும்பப் பெறப்படுகிறது” என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஒப்பந்தம் குறித்து ஈரான் தெரிவித்துள்ளதாவது

கடந்த 100 நா்ட்களுக்கு மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க போரானது தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இது குறித்து ஈரான் தெரிவித்துள்ளதுப்படி

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டின் கடற்பகுதி அமெரிக்க ராணுவ முற்றுகையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும் லெபனான் உள்ளிட்ட பிராந்தியத்தின் அனைத்து பகுதிகளிலும் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.