Iran warns of no deal in talks with US unless it stops attacks on Lebanon google
உலகம்

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தா விட்டால்! : பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாது : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

US Iran War Update in Tamil : ஈரான் அமெரிக்காவிற்கு இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் , இஸ்ரேலை லெபனான் மீது தொடர் கண்முடித்தனமான தாக்குதல்களை நடத்தியது

Rohini

ஈரான் எச்சரிக்கை

US Iran War Update in Tamil : ஈரான் அமெரிக்கா இடையே இரு வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் , இஸ்ரேலானது லெபனான் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது . இதில் 250 பேர் உயிரிழப்பு மற்றும் 1,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .

லெபனான் மீது குண்டு மழை பொலிவு

இஸ்ரேல் போர் விமானங்கள் வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனான் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெய்ரூட்டின் வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முன்னறிவிப்பின்றித் தாக்கப்பட்டதால், தெருக்களில் சென்ற வாகனங்கள் முழுவதும் தீக்கிரையாயின.

தொடர் தாக்குதல் :மருத்துவ பணியாளர்களே இல்லாத நிலை

லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 12 பேர் மருத்துவப் பணியாளர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது ,காயமடைந்த 700 பேருக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் இடமில்லாத சூழல் நிலவுகிறது.

அவசரமாக ரத்த தானம் செய்யுமாறு அரசு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது

இஸ்ரேலின் மறைமுக தாக்குதல் :போர்க்குற்றம்

ஏற்கனவே 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்து இருக்கும் நிலையில் ,இஸ்ரேலின் இந்த மறைமுகத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அங்கு வான்வெளி மூடப்பட்டுள்ளதால், 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் நில எல்லைகள் வழியாக அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருவைத்து கவலைக்குரிய நிலமையாக இருக்கிறது.

இந்த நிலைமை தொடர்ந்தால் , அமைதி பேச்சுவார்த்தை எட்டுப்படாது ,ஈரான்

லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு ஈரான் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் , தற்போது இஸ்ரேல் லெபனான் மீதான தககுத்தல்களை நிறுத்தா விட்டால் , அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான உடன்பாடு ஏற்படாது

என ஈரான் திட்டவட்டமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, தற்காலிக இந்த போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியத்தியதற்கு கண்டங்களை தெரிவித்தது ஈரான் .