உலகம்

ட்ரம்ப்,நெதன்யாகு கடவுளின் எதிரிகள்:"பத்வா" அறிவித்த ஈரான் மதகுரு

அதிபர் ட்ரம்பும், பிரதமர் நெதன்யாகுவும் நிச்சயம் பழிவாங்கப்படுவார்கள் என்று, ஈரான் மதகுரு எச்சரித்துள்ளார்.

Kannan

ஈரான்-இஸ்ரேல் சண்டை முடிவுக்கு, வந்து இதற்கு தானே காரணம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிக் கொண்டிருக்கிறார். போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிர்ச்சேதம் ஈரானை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தநிலையில், ஈரான் மதகுரு அயதுல்லா நாசர் மகரேம் ஷிராசி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கடுமையாக சாடி இருக்கிறார். இருவரும் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்த அவர், அவர்களுக்கு எதிராக பத்வா பிறப்பித்துள்ளார்.

பத்வா என்பது மத குருக்களால் வழங்கப்படும் மத தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. ”ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தேகத்திற்கு இடமின்றி பழிவாங்கப்படுவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மத தலைவர்களைப் பாதுகாப்பதும், அத்தகைய அச்சுறுத்தல்களைச் செய்பவர்களை எதிர்கொள்வதும் நமது கடமையாகும், மேலும் இந்த புனிதத்தை மீறுவது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்.

இஸ்லாமிய குடியரசு தலைமையை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தலைவர்களை வீழ்த்த வேண்டும்.

கடுமையான குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கும் நடைமுறை அமலில் இருப்பது குறிப்பிடதக்கது.

====