US Announces Rs 100 Crore Rupee Bounty on Mojtaba Khamenei's Head! source: google
உலகம்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தலைக்கு ரூ.100 கோடி சன்மானம், அமெரிக்கா அறிவிப்பு!

US announces ₹100 crore reward for on Iran's new leader Mojtaba Khamenei : டிரப்பை போலவே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

S Kavitha

Iran–Israel–US Conflict: US Announces 100 Crore Rupee Bounty on Mojtaba Khamenei's Head!

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர்

ஈரானின் புதிய உச்ச தலைவா் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் 100 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரான் மீது கூட்டு தாக்குதல்

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தியது.

அயதுல்லா கமேனி உயிரிழப்பு

இந்த தாக்குதல் நடந்த முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் மற்றும் தலைமை மதகுருவான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா்.

உச்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி

கமேனி கொல்லப்பட்டதை அடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக தோ்வு செய்யப்பட்டாா்.

ஈரான் உச்ச தலைவராக பொறுப்பேற்ற உடன் கடந்த வியாக்கிழமை மொஜ்தபா கமேனியின் அறிக்கை ஒன்று ஈரான் மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மொஜ்தபா கமேனி அறிக்கை

அந்த அறிக்கையில் மொஜ்தபா கமேனி, ஈரானின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் அமெரிக்காவின் நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மொஜ்தபாவின் இந்த அறிக்கை உலக நாடுகளிடையே அதிரவலையை ஏற்படுத்தி இருந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் மீது இதுவரை நடத்திய தாக்குதலை விட இன்னும் 20 மடங்கு தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஈரான் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு மாறும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

டிரப்பை போலவே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

100 கோடி சன்மானம் - அமெரிக்கா அறிவிப்பு

தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவா் மொஜ்தபா கமேனி உள்பட அந்நாட்டின் 10 தலைவர்களின் விவரங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் இவர்கள் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அமெரிக்க மதிப்பில் ஒரு கோடி டாலர்,அதாவது இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், மொஜ்தபா கமேனி, அலி லாரிஜானி மற்றும் IRGC இன் தலைமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிற நபர்கள் என மொஜ்தபா கமேனி அலுவலகத்தின் துணைத் தலைவரான அலி அஸ்கார் ஹெஜாசி,

பாதுகாப்பு கவுன்சிலின் உச்சத் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் பிரிகேட் ஜெனரல். எஸ்கந்தர் மொமெனி , உச்சத் தலைவரின் உள்துறை ஆலோசகர் எஸ்மாயில் கதிப்,

பாதுகாப்புத் துறை செயலாளர், ராணுவ ஆலோசகர், உள்துறை அமைச்சர், புலனாய்வுத் துறை அமைச்சர் என மற்றவர்களின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

=====