இஸ்ரேல் - ஹமாஸ் போர் :
Israel Gaza War Ceasefire Peace Plan Update in Tamil : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2023ம் ஆண்டு தொடங்கிய போர் உச்சக்கட்டத்தை அடைந்து, சுமார் 65,000 பேரை பலிவாங்கி இருக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சியில் ஈடுபட்டு, 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.
அமைதி ஒப்பந்தம் ஏற்பு
போரை நிறுத்தி, குறைந்தபட்சம் சில பிணைக் கைதிகளை விடுவிக்கும், அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாசும் ஒப்புக் கொண்டன. இது தொடர்பான ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. இதையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 12 மணி அளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
பிணைக் கைதிகள் விடுதலை
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”போர்நிறுத்த ஒப்பந்தம் மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்தது. பிணைக் கைதிகளை விடுதலை செய்யும் பணி நடந்து வருகிறது. காசா பகுதியில் குவிக்கப்பட்டு இருந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். தெற்கு பகுதியில் அவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தல் கொடுத்தாலும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பர் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
காசாவுக்கு திரும்பும் மக்கள்
தெற்கு பகுதியில் தஞ்சம் புகுந்திருந்த காசா பகுதி மக்கள் தங்கள் வாழ்விடங்களை நோக்கி திரும்பி வருகிறார்கள். அடுத்து வரும் நாட்கள் கடும் சவாலாக இருக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காசாவில் சர்வதேச அமைதிப்படை
காசா பகுதியில் சர்வதேச அமைதி படையை நிறுத்தி அங்கு இயல்பு நிலை திரும்புவது உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான பணிகளும் படிப்படியாக தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க : Israel Gaza War Ceasefire: டிரம்ப், நெதன்யாகுவுக்கு மோடி வாழ்த்து
அமெரிக்கா எடுத்த முன் முயற்சி வெற்றி பெற்று இருப்பதால், இனி காசா தனது பழைய நிலைக்கு மெதுவாக திரும்பும் என்ற நம்பிக்கை வலுப்பெற்று இருக்கிறது.
========