Israel-Hezbollah offensive has ended, Trump announces after talks with Netanyahu  google
உலகம்

இஸ்ரேல் -ஹிஸ்புல்லா தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது ;நெதன்யாகு உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ,டிரம்ப் அறிவிப்பு

தொடர்ந்து நீடிது வரும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையேயான தற்காலிக சண்டை நிறுத்தm m முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Rohini

இஸ்ரேல் இனி தாக்குதல் நடத்தாது ,

இஸ்ரேல் படைகள் "பெய்ரூட்டுக்குச் செல்லாது என்றும், அங்கு சென்று கொண்டிருந்த படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்

அனைத்துவிதமான துப்பாக்கிச் சூடு தாக்குதல்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அவர்களைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

வெளியான அறிவிப்பு ;பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தல்

டிரம்பின் இந்தச் செய்தியை வெளியிட்ட சில நேரங்கள் கழித்து , லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் கண்டறிந்து, வடக்கு இஸ்ரேலின் சில பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மக்களை பாதுகாக்கப்பட்ட இடங்களில் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

வரலாறாகவே தொடரும் பதற்ற சூழல்

1948-ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாடு புதிதாக உருவானதுமுதல் அந்த நாட்டுக்கும், அண்டை நாடான லெபனானுக்கும் இடையே வரலாறாகவே மோதல் நிலவி வருகிறது ,\

குறிப்பாக ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே நடைப்பெற்ற சம்பவங்களால் மோதல் மேலும் தீவிரமடைந்திருந்தது இந்தநிலையில் , தற்போது அதிபர் டிரம்ப் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

தற்காலிக சண்டை நிறுத்தம்

ஈரானுடன் அமெரிக்கா சண்டை நிறுத்தம் செய்ததையடுத்து, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் வாஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தம் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

டிரப்பின் பேச்சுவார்த்தைகு பிறகு போர் நிறுத்தம்

அமெரிக்க அதிபர் டிரப்பின் தொலைப்பேசி பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக மோதலானது முடிவுக்கு வந்திருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்