Israel PM Benjamin Netanyahu orders Israeli forces to capture key Lebanese forces Israel Iran War Update in Tamil google
உலகம்

லெபனானின் முக்கிய இடங்களை கைப்பற்ற வேண்டும் : இஸ்ரேல் படைகளுக்கு நெதன்யாகு உத்தரவு

Israel PM Benjamin Netanyahu Order To Capture Lebanon : இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் படைகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது

Rohini

ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா மோதல்

Israel PM Benjamin Netanyahu Order To Capture Lebanon : இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து நடத்திய தாக்குதலால் ஈரான் மூத்த மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தளங்களின் மீது ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா படைகள்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 500 கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது

பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்

லெபனானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அதற்கு பதிலடியாக பல்லவேறு தாக்குதல்களை நடித்த வருகிறது .இந்த நிலையில், லெபனானில் மேலும் சில பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் இஸ்ரேல் ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவின் கட்டளை

இஸ்ரேல் எல்லையில் வாழும் மக்களின் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்காக, லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லெபனானுக்குள் முன்னேறும் இஸ்ரேல்

இதன் காரணமாக லெபனான் எல்லைக்குள் நுழைந்துள்ள இஸ்ரேலிய படைகள் படிப்படியாக முன்னேறி வருகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறித்து வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

======