Israeli airstrikes targeting Hezbollah organizations in Lebanon. google
உலகம்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புகள் குறிவைப்பு : இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

Israel Iran War Update in Tamil : ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி இருந்தது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது

Rohini

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்

Israel Iran War Update in Tamil : ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .தொடர் தாக்குதலில் ஈரான் தலைவர் கமேனி மற்றும் அமைச்சர்கள் பலரும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது .இத்தாக்குதலில் பள்ளி மாண்வர்கள் பலரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

ஈரான்-ற்கு ஆதரவாக லெபனானின் தாக்குதல்

ஈரான் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

நட்பு நாடுகளையும் தாக்கி வரும் ஈரான்

இந்த மோதலை அடுத்து மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

எண்ணெய் கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. விமான சேவையும் மத்திய கிழக்கு பகுதியில் முடங்கி உள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹிஸ்புல்லாவின் தாக்குதலை தொடர்ந்து பெய்ரூட் மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. திங்கட்கிழமை அன்று எல்லை பகுதியில் இருந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், லெபனானில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நகரங்களை சேர்ந்த மக்கள், அந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வெளியேறிச் செல்லுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.