உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் 80 பேர் பலி : வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 80 பேர் வரை பேர் உயிரிழந்துள்ளனர்.

Kannan

இஸ்ரேல் - ஈரான் சண்டை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் தங்கள் நாட்டு மக்கள் 80 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.

320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

இஸ்ரேலின் இந்த மூர்க்கத்தனமாக செயலை ஈரான் ஒருபோதும் ஏற்காது என்றார் அவர்.

இஸ்ரேல்-ஈரான் பதற்றத்திற்கு பிறகு எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஐ.நா. தலைவர் அன்டோனியோ குத்ரேஸ், இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் எதிர் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தசூழலில் அமைதியும், ராஜதந்திரமும் மேலோங்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசரமாக விவாதிக்கப்பட்டாலும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அமைதி காத்து வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

======