Italian Politician’s Comments at Hyderabad Congress Summit Spark Controversy Google
உலகம்

Italian Politician’s Remarks at Congress Summit Go Viral : ராகுல் காந்தி பங்கேற்ற ஹைதராபாத் மாநாட்டில் பேசியது சர்ச்சை!

காங்கிரஸ் ஏற்பாடு செய்த பாரத் உச்சி மாநாட்டில் Bjp-க்கு எதிராக ‘வோட் சோர், கத்தி சோட்’ முழக்கத்தை எழுப்பிய இத்தாலி அரசியல் தலைவர் ஜியாகோமோ ஃபிலிபெக்கிற்கு கடும் எதிர்ப்பு ...

NARENDRAN K

ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் பாரத் மாநாடு :

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நவம்பர் 14-ம் தேதி பாரத் உச்சி மாநாடு (Bharat Summit 2026) நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சியின் (Party of European Socialists) பொதுச்செயலாளர் ஜியாகோமோ ஃபிலிபெக், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு :

இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்து வெளிநாட்டை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்ததற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவை விமர்சிக்கும்போது அதை கேட்டு யாராவது சிரிப்பார்களா என ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.

மேலும், இந்தியாவின் ஜனநாயக விவகாரங்களில் வெளிநாட்டு தலைவர்கள் தலையிடுவதற்கு காங்கிரஸ் கட்சி மேடை அமைத்து கொடுப்பதாகவும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இத்தாலி பிரதமர் மெலோனியின் கட்சியை சேர்ந்த தலைவர் எதிர்ப்பு :

இந்த விவகாரம் இத்தாலியிலும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஃபோர்சா இத்தாலியா கட்சியின் மூத்த தலைவரான டெபோரா பெர்காமினி, ஜியாகோமோ ஃபிலிபெக்கின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நட்பு நாடான இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவாதங்களில் வெளிநாட்டைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் தலையிடுவது பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமார் 97 கோடி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ள இந்தியாவுக்கு ஐரோப்பியர்கள் ஜனநாயகம் குறித்து அறிவுரை வழங்குவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா இத்தாலி அரசியல் விவாதமாக மாறிய சர்ச்சை :

ஒருபுறம், இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகக் கூறி ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜியாகோமோ ஃபிலிபெக் மறுபுறம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிடக்கூடாது என கூறியுள்ள டெபோரா பெர்காமினி என இந்த விவகாரம் இரு நாடுகளின் அரசியல் தலைவர்கள் இடையேயான கருத்து மோதலாக மாறியுள்ளது.

===================