Italian Prime Minister Meloni has hit back at Trump's criticism, publicly warning that they will not bow to anyone. google
உலகம்

Giorgia Meloni Vs Trump : இத்தாலி பிரதமர் குறித்து டிரம்ப் விமர்சனம் : தலைவணங்க மாட்டோம், மெலோனி பதிலடி..!

டிரம்பின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கும், இத்தாலி பிரதமர் மெலோனி, யாருக்கும் தலைவணங்க மாட்டோம் என பகிரங்கமாக எச்சரித்து இருக்கிறார்.

Kannan

பிரான்சில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனி, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்தாலி பிரதமர் பற்றி டிரம்ப் விமர்சனம்

இத்தாலியப் பிரதமர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கேட்டதாக டிரம்ப் கூறினார். லா7 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ஜி7 உச்சிமாநாட்டில் ஜார்ஜியா மெலோனி என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கிட்டத்தட்ட கெஞ்சினார்.

கெஞ்சியதால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்

அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. அதனால் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். வேறு வழியில்லை. ஆனால் அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது.

ஒருவேளை நான் அவரிடம் பேசியது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும். நான் அவரிடம் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை." என்று டொனால்ட் டிரம்ப் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

டிரம்பை எச்சரித்த மெலோனி

டிரம்பின் விமர்சனம் இத்தாலி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. உடனடியாக வீடியோ வெளியிட்டு இருக்கும் இத்தாலி பிரதமர் மெலோனி,

“ இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு.

டிரம்பின் கூற்றுகள் உண்மைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அவரது பேச்சு மிகவும் வெட்கக்கேடானது என்றும் மெலோனி சாடியுள்ளார்.

நட்புறவை கெடுக்கிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தனது சொந்த நட்பு நாடுகளையே இந்த முறையில் நடத்துவதைக் கண்டு தாம் "அதிர்ச்சியும் வருத்தமும்" அடைந்ததாகக் கூறியுள்ளார்.

நல்லுறவை சீர்குலைக்கும் அமெரிக்கா

அமெரிக்காவிற்கும் அதன் பாரம்பரிய நட்பு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ குறித்த டிரம்பின் கருத்து, இருநாட்டு நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

கொந்தளிக்கும் இத்தாலி

இதற்கிடையே, இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி, "பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கடுமையான மற்றும் அவமதிக்கும் கருத்துக்கள், மெலோனிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இத்தாலிக்குமான அவமதிப்பாகும்.

துணை பிரதமர் பயணம் ரத்து

இந்த காரணத்திற்காக, ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த எனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்." என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இத்தாலி பிரதமர் குறித்த டிரம்பின் பகிரங்க விமர்சனம், இருநாட்டு நல்லுறவை பாதித்துள்ளது.

==============