Jaish-e-Mohammed Senior Commander Killed in Car Accident: Who Is Behind It? Google
உலகம்

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மூத்த கமாண்டர் விபத்தில் பலி : பின்னணியில் யார்..?

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்பை சேர்ந்த உயர் நபர்களுக்குள் இந்த தீவிரவாதியும் ஒருவர் ...

NARENDRAN K

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த நபர் பலி :

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் முகமது ஆசிம், லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் அவருடன் பயணித்த மனைவி ஹூமா மற்றும் 15 வயது மகன் தல்ஹாவும் உயிரிழந்ததாக பாகிஸ்தானின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து அக்டோபர் 15ஆம் தேதி லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சாலையில் நிகழ்ந்ததாக தெரிகிறது

சிக்னலில் நின்ற கார் மீது மோதிய லாரி :

பாகிஸ்தான் ஊடகமான டான் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 15ஆம் தேதி நள்ளிரவு இந்த விபத்து நடந்துள்ளது.

சிக்னலில் கார் நின்றுகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிச் சென்ற 22 சக்கரங்கள் கொண்ட கனரக லாரி பின்னால் இருந்து காரின் மீது மோதியதாகக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் கார் கடுமையாகச் சேதமடைந்ததுடன், அதில் இருந்த மூவரும் உயிரிழந்தனர்.

தலைமறைவான லாரி ஓட்டுநர் போலீஸ் விசாரணை :

விபத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் லாரியைக் கைப்பற்றியுள்ளனர்.

\ஆனால், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரைக் கைது செய்ய முடியவில்லை என்றும் டான் செய்தி தெரிவிக்கிறது.

இதையடுத்து, ஓட்டுநரைக் கண்டுபிடிப்பது மற்றும் விபத்துக்கான காரணத்தை விசாரிப்பது தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ளன.

இருப்பினும், ஓட்டுநர் தப்பிச் சென்றது மட்டுமே இது திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கான ஆதாரமாகாது.

விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா என விசாரணை :

சமூக வலைதளங்களில் உயிரிழந்த முகமது ஆசிம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த கமாண்டர் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

அந்த அமைப்பின் செயல்பாடுகள் ஆட்சேர்ப்பு மற்றும் நிதி தொடர்பான பணிகளில் அவர் ஈடுபட்டிருந்ததாகவும் சில பதிவுகள் கூறுகின்றன.

ஆனால், இந்த அடையாளத்தையும் அவரது அமைப்புடனான தொடர்பையும் வெளியிட்ட விபத்துச் செய்தி டான் உறுதிப்படுத்தவில்லை. எனவே, இந்தத் தகவல்களைத் தனியாகச் சரிபார்ப்பது அவசியம்.

பின்னணியில் யார்? RAW தொடர்பு உள்ளதா? என்று சந்தேகம் :

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டாலும் இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலையா, விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்

இந்தியாவின் RAW அல்லது வேறு உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுவதற்கும் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் இல்லை என சொல்லப்படுது .

===================