https://x.com/khamenei_ir/media
உலகம்

”உங்களுக்கான தண்டனை தொடரும்” : இஸ்ரேலை எச்சரித்த ஈரான்

‘மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள்; தண்டனை தொடரும்’, என்று இஸ்ரேலை ஈரான் சுப்ரீம் தலைவர் கமேனி எச்சரித்துள்ளார்.

Kannan

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 10வது நாளை எட்டியுள்ளது. சண்டை தீவிரம் பெற்றுள்ள நிலையில், இடையில் புகுந்த அமெரிக்காவும் ஈரானின், அணு நிலையங்களை தகர்த்துள்ளது.

இதனால், கடுங்கோபம் அடைந்துள்ள ஈரான், இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்கா மீதும் தாக்குதல் நடத்தும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப்பெரிய தவறிழைத்து விட்டார்கள். பெரும் குற்றம் புரிந்துள்ளார்கள்.

இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டிய நாடு. தண்டனை தொடர்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், அந்தப் பதிவில் அமெரிக்காவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் இராவானி, “அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்.

எந்த நேரத்தில், எத்தகைய தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஈரான் ராணுவம் முடிவு செய்யும்.” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலை விட அமெரிக்காவை தாக்குதல் ஈரானுக்கு எளிது என்பதால், போர் அடுத்தக் கட்டத்தை நகர்வதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி விட்டன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக சீனா, வட கொரியா களமிறங்கினால், அது உலகப்போரின் கொண்டு போய் நிறுத்தும் என்ற பீதி எழுந்துள்ளது.

=====