https://x.com/khamenei_ir
உலகம்

ஈரான் சரணடையாது, இஸ்ரேலை தண்டிப்போம் : கமேனி திட்டவட்டம்

ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என்றும், அமெரிக்காவை எதிர்கொள்ள தயார் என்றும், அயதுல்லா கமேனி மீண்டும் உறுதிபடத் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் 5வது நாளாக நீடிக்கும் நிலையில், இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது.

இந்தச் சண்டையில் இஸ்ரேல் ஆதரவாக நிற்கும் அமெரிக்கா, ஈரானை மிரட்டி வருகிறது.

சுப்ரீம் தலைவர் கமேனி பதுங்கி இருக்கும் இடம் அமெரிக்காவுக்கு தெரியும் என்றும், அவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் எனவும், அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இதனால், போரில் அமெரிக்காவும் களமிறங்கும் கூறப்படும் நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று கமேனி உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.

போரை கொண்டு தங்களை யாரும் அடிபணிய வைக்க முடியாது என்றும், அமெரிக்கவை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று எச்சரித்துள்ள அவர், ஈரான் ராணுவம் எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம் என்று கமேனி உறுதிபடக் கூறியுள்ளார்.

-----