அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதில் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி ரகசிய இடத்தில் பதுங்கினார்.
ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி, இஸ்ரேலை நிலைகுலைய வைத்தது. அமெரிக்காவும் சண்டையில் இறங்க, மூன்றாம் உலகப் போர் வருமோ என்ற அச்சம் எழுந்தது. திடீரென இருநாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்க முன்வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இஸ்ரேல் இதை வரவேற்றாலும், முதலில் மறுத்த ஈரான் பின்னர் சண்டையை நிறுத்துவதாக தெரிவித்தது. இந்தநிலையில், ஈரான் மதத் தலைவர் கமேனியின் உரை அந்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரில் தலையிடவில்லை என்றால், இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என அமெரிக்காவுக்கு அச்சம் எழுந்தது. இந்தப் போரில் அமெரிக்கா சாதித்தது ஒன்றும் இல்லை. வெற்றி பெற்றது ஈரானின் இஸ்லாமிக் குடியரசுதான். அமெரிக்காவின் கன்னத்தில் நாங்கள் அறை கொடுத்தோம்.
கத்தாரில் உள்ள ராணுவ தளங்களை வெற்றிகரமாக தாக்கினோர். எதிர்காலத்திலும் இதுபோன்ற தாக்குதல் தொடரலாம். எதிரி நாடுகளுக்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால், அத்துமீறி தாக்கினால், அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும், இவ்வாறு அயதுல்லா கமேனி எச்சரித்தார்.
====