"Kim Jong Un Likes Me More Than Anyone Else": Trump’s Remark Sparks Buzz in White house  Google
உலகம்

உலகத்திலேயே கிம்முக்கு பிடித்த ஒரே நபர் நான்தான்" - டிரம்ப் பரபரப்பு பேச்சு ...

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன...

NARENDRAN K

பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி :

அணு ஆயுதங்கள் தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினர்.

ஈரானின் அணு திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், அணு ஆயுதங்களை ஏற்கனவே கொண்டுள்ள வடகொரியாவை ஏன் அதே அளவில் விமர்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

டிரம்ப் அளித்த பதில் :

இதற்கு பதிலளித்த டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது நண்பர் எனக் குறிப்பிட்டார்.

மேலும், "கிம் ஜாங் உனுக்கு உலகத்திலேயே பிடித்த ஒரே நபர் நானாகத்தான் இருக்கலாம். எனக்கும் அவரைப் பிடிக்கும்" என்று நகைச்சுவை கலந்த பதிலை அளித்தார்.

வடகொரியா குறித்து விளக்கம் :

தொடர்ந்து பேசிய டிரம்ப், வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அது அமெரிக்காவுக்கு தற்போது பெரிய அச்சுறுத்தலாக இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல், தன்னுடைய தலைமையில் அமெரிக்காவுக்கு வடகொரியாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

டிரம்ப் - கிம் உறவு :

டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.

அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் டிரம்ப், கிம் ஜாங் உனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமெரிக்க அதிபராக வரலாறு படைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக அந்த சந்திப்புகள் பார்க்கப்பட்டன.

மீண்டும் பேசுபொருளான கருத்து :

ஒருபுறம் ஈரானின் அணு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் டிரம்ப், மறுபுறம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உனை நண்பர் என்று குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இந்த கருத்து தற்போது சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

====================