Kim Jong-un nominally re-elected as president; only 0.07% of the votes against remaining 99.93% he got Win Election 2026 google
உலகம்

வட கொரியாவில் ”பெயரளவில் தேர்தல்” : மீண்டும் அதிபரானார் கிம் ஜாங் உன் : 99.93% ஆதரவு, 0.07% மட்டுமே எதிர்ப்பு!

Supreme Leader Kim Jong Un North Korea Elections Result 2026 : வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார்

Rohini

99.93% வாக்குகள் -மீண்டும் அதிபர்

Supreme Leader Kim Jong Un North Korea Elections Result 2026 : மார்ச் 15 அன்று நடைபெற்ற 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தலில், கிம் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.93% வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றி வெற்றியை நிலை நிறுத்து உள்ளன .

0.07% மட்டுமே எதிர்ப்பு

குறிப்பாக வெறும் 0.07% மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது முக்கியமானதாக பார்க்கப்டுகிறது . 1957க்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது

வாக்களித்தவர்களின் விவரம்

உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தலில் அங்கு வாக்களித்தவர்களின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது .அதன்படி 99.99% பேர் மொத்தமாக வாக்களித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் அல்லது கடலில் பணிபுரிபவர்கள் (0.0037%) மற்றும் வாக்களிக்க வராதவர்கள் (0.00003%) தவிர மற்ற அனைவரும் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு தரவுகள் கூறுகின்றன.

முதன் முறையாக பதிவாகிய எதிர்ப்பு வாக்குகள்

வடகொரியா தேர்தல் சட்டங்களின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 687 பிரதிநிதிகள் இந்தப் பேரவைக்குத் தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.