இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) அமல்படுத்தும் முக்கிய மசோதாவுக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதை எட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 93 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 29 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானது.
சுமார் ஒன்பது மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் சந்தைகளுக்கும் அதிக அணுகலை வழங்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 95 சதவீத பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்கவரிகள் நீக்கப்படவோ அல்லது கணிசமாக குறைக்கப்படவோ உள்ளன.
இதில் பழங்கள், கடலுணவுகள், இரும்பு, எஃகு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும்.
மேலும், பல பொருட்கள் ஒப்பந்தம் அமலுக்கு வரும் முதல் நாளிலிருந்தே வரியில்லா சலுகையை பெறும்.
மறுபுறம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நியூசிலாந்து முழுமையான வரியில்லா சந்தை அணுகலை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் மூலம் ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள், மருந்துப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வர்த்தக சூழலில் இந்தியா தனது ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
குறிப்பாக உற்பத்தித் துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், ஜவுளி மற்றும் பொறியியல் துறைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என வணிக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று இந்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் வெறும் வர்த்தக ஒப்பந்தமாக மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பிற்கான அடித்தளமாகவும் பார்க்கப்படுகிறது.
முதலீடு, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகளை இந்த FTA உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் புதிய கட்டத்
==================