Meta Launch New AI Smart Glasses with Display Features Price in Tamil 
உலகம்

மொபைலுக்கு குட்பை : AI தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்

Meta Launch New AI Smart Glasses with Display : மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்து வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Kannan

நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் :

Meta Launch New AI Smart Glasses with Display : வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகம், ஒவ்வொரு கண்டுபிடிப்பும், மனித குலத்திற்கு பெரிய உதவியாக இருந்து வருகின்றன. ஓபன் ஏஐயும், கூகுள் ஜெமினியும் சாட் ஜிபிடியின் கார்ட்டூன் ஜிபிலி, கூகுள் ஜெமினியோட நானோ பனானா ஏஐ ஸ்டுடியோனு புதுப்புது ட்ரெண்ட்டுகள் சந்தையை கலக்கிட்டு வருகின்றன.

AI தொழில்நுட்பத்தில் மூக்குக் கண்ணாடி :

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஏஐ தொழில்நுட்பத்தில இயங்குற புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது(Meta Introduce Meta AI Glasses). மொபைல் பயன்பாட்டை குறைக்கும் விதமா இந்த ஸ்மார்ட் கண்ணாடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மெட்டா - ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம் :

மெட்டா நிறுவனம் தனது கனெக்ட் மாநாட்டில்(Meta Connect 2025), தொழில்நுட்ப ஆர்வலர்களை வியக்க வைக்கும் வகையில் 3 புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியது. மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே (Meta Ray-Ban Display), ரே-பான் மெட்டா ஜெனரல் 2, ஓக்லி மெட்டாவான்கார்டு கண்ணாடிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் விலை ரூ.70,300 :

12 எம்பி கேமரா, மேப் மற்றும் புகைப்படங்களை பார்ப்பது, வாட்ஸ்அப், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை இயக்குவது போன்ற அம்சங்களை இந்த கண்ணாடி கொண்டிருக்கிறது. இந்திய மதிப்பின் படி இதன் விலை ரூ.70,300 ஆக இருக்கும்(Ray-Ban Meta Smart Glasses Price in India). இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் வரும் 30ம் தேதி(Meta AI Glasses Launch Date) முதல் விற்பனைக்கு வரும். இதன் சிறப்பம்சம், வலது லென்ஸில் உள்ளமைக்கப்பட்ட முழு வண்ண, உயர் தெளிவுத்திறன் கொண்ட ஸ்கிரீன். இது தேவைப்படும்போது மட்டுமே இயங்கும்,

கைவிரல் அசைவில் கட்டுப்பாடு :

இதை கட்டுப்படுத்த மெட்டா நியூரோன் பேண்ட் (Meta Neural Band) என்ற புதிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை மணிக்கட்டில் அணிந்து கொண்டால் போதும், நம் கைவிரல்களின் அசைவுகளை புரிந்துகொண்டு கண்ணாடியை இயக்கும். விரல்களால் லேசாகத் தட்டினால் போதும்; ஒரு மெனுவில் இருந்து ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க, கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் லேசாகக் கிள்ளினால் போதும்! இத்தகைய எளிமையான சைகைகள் மூலம், மெசேஜ் பார்ப்பது, புகைப்படங்களைப் பார்ப்பது, மெட்டா ஏஐயிடம் பேசுவது, மற்றும் ரூட் மேப் என அனைத்து வசதிகளையும் பெறலாம்.

மேலும் படிக்க : ”ஊழலுக்கு 100% முற்றுப்புள்ளி” : அல்பேனியாவில் ’AI’ அமைச்சர்

கண்ணாடியின் பேட்டரியை(Meta AI Gasses Features) ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் நீடிக்கும். அதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் கூடுதலாக 30 மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது. நியூரோன் பேண்ட் 18 மணிநேர பேட்டரி ஆயுளையும், ஐ.பி.எக்ஸ்7 வாட்டர் ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

=============