Massive floods occurring without a single drop of rain falling have devastated Nepal and claimed innocent lives AI generated
உலகம்

”மழையே இல்லாமல் மலை உச்சியில் பேரழிவு” : புரட்டி போட்ட வெள்ளம், பலியான அப்பாவி உயிர்கள், இயற்கையின் கோர தாண்டவம்..!

ஒரு துளி மழை கூட பெய்யாமல், நேபாளத்தை புரட்டி போட்டிருக்கும், பெரு வெள்ளம், அப்பாவி உயிர்களை பலிவாங்கி சென்றிருக்கிறது.

Kannan

இமயமலையில் திடீர் மாற்றம்

இமயமலையின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட திடீர் இயற்கை மாற்றம், நேபாளத்தின் வடக்குப் பகுதிகளில் சில மணி நேரங்களுக்குள் மிகப்பெரிய பேரழிவாக மாறியது.

கட்டமைப்புகள் காணாமல் போயின

பனி, பாறைகள், சேறு மற்றும் பெருக்கெடுத்த நீர் ஒன்றாக இணைந்து கீழ்நோக்கி பாய்ந்ததால், ஆற்றின் பாதையில் இருந்த பல கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

இயற்கையின் சக்தி, மாயமான குடியிருப்புகள்

குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் என பல பகுதிகள் வெள்ளத்தின் தாக்கத்தில் சிக்கியுள்ளன. பேரழிவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட வான்வழி ஆய்வுகள், இயற்கையின் சக்தி எந்த அளவுக்கு நிலப்பரப்பையே மாற்றியமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

அணை போல உடைந்த பெருவெள்ளம்

உயரமான பகுதியில் இருந்து ஒரு பெரிய பனிப்பாறைத் துண்டு மற்றும் பாறைகள் கீழே சரிந்ததே, பெருவெள்ளத்தில் காரணமாக அமைந்து இருக்கிறது.

பனிப்பாறைகள் ஆற்றின் நீரோட்டத்தை அணை போல தடுக்க, பின்னர், அந்த தடுப்பே அணை உடைந்து போன்ற பெருவெள்ளத்திற்கு வித்திட்டது.

மிகப்பெரிய அளவில் தண்ணீர், சேறு மற்றும் பாறைகள், மரங்கள் ஒரே நேரத்தில் கீழ்நோக்கி பாய்ந்தன.

மனித உயிர்களை பறித்த இயற்கை

பேரழிவின் தாக்கம் மனிதர்களின் உயிரிழப்பில் மட்டும் முடிவடையவில்லை. முக்கியமான போக்குவரத்து வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்புகள் பலத்த சேதம்

பாலங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்த கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மின்சார உற்பத்தி மற்றும் பரிமாற்ற வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்வதும் சவாலாகியுள்ளது.

மீட்பு குழுக்களுக்கு பெரும் சவால்

மலைப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்படும்போது, சம்பவ இடத்தை அடைவதே மீட்புக் குழுக்களுக்கு மிகப்பெரிய பணியாக மாறுகிறது.

சுற்றுலா பயணிகள் பாதிப்பு

இந்த பேரழிவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள சுற்றுலா வாரியத்தின் ஆரம்ப தகவலின்படி, நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக அந்தப் பகுதிகளை கடந்து சென்ற பயணிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மாறக்கூடிய சூழல் உள்ளது.

மீட்பு பணிகளில் தொய்வு

மலைப்பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மீட்புப் பணிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் சில இடங்களுக்கு தரைவழியாக செல்வதும் கடினமாகியுள்ளது.

இதனால் வான்வழி ஆய்வுகள் மற்றும் தொலைநிலை செயற்கைக்கோள் தகவல்கள் மீட்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றுகின்றன.