Moon Mission 2025 China Shenzhou 21 Mission Sent Three Astronauts 4 Mice to Tiangong Space Station for Experiments China Space Station
உலகம்

4 எலிகளுடன் விண்வெளி சென்ற ஆராய்ச்சியாளர்கள் : சீனா முயற்சி!

China Space Station Shenzhou 21 Mission Launch Date : 4 எலிகளுடன் விண்வெளி சென்ற சீன ஆராய்ச்சியாளர்கள், 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர்.

Bala Murugan

7வது பயணம்

China Space Station Shenzhou 21 Mission Launch Date : சீனாவில் 2022-இல் கட்டமைக்கப்பட்ட நிரந்தர விண்வெளி நிலையம் ‘டியாங்காங்க் (சொர்க்க மாளிகை)’ இந்த நிலையத்துக்கான சீனாவின் 7-ஆவது திட்டம் ஆக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது. சீனாவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டமான ‘ஷென்ஸௌ’-இன் கீழ், அந்நாட்டின் இளம் வீரர் குழு ஷென்ஸௌ-21 விண்கலத்தில் வெள்ளிக்கிழமை(அக். 31) புறப்பட்டு வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

விண்வெளிக்கு சென்ற இளம்வீரர்

இந்தக் குழு சுமார் 6 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி 27 விதமான அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான இளம் வீரர் வூ ஃபெய் இந்த விண்வெளித் திட்டத்தின் மையப் பொருளாக மாறியிருக்கிறார். அதற்கான முக்கிய காரணம், சீனாவில் எந்தவொரு விண்வெளி வீரரும் இத்தகைய இளம் வயதில் விண்வெளிக்குச் சென்றதேயில்லையாம். அவருடன் ஸாங்க் ஹாங்ஸாங்க்(39) மற்றும் மூத்த வீரரான ‘கமாண்டர்’ ஸாங்க் லூ(48) ஆகியோர் விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

ஷென்ஸௌ-21 குழுவின் வீடியோ வைரல்

சீனாவின் நிரந்த ஆராய்ச்சி நிறுவனமான சொர்க்க மாளிகையில் இந்தக் குழு, முந்தைய ‘ஷென்ஸௌ-20’ குழு மேற்கொண்ட ஆராய்ச்சிப் பணிகளைப் விண்வெளிறியல் பின்தொடர உள்ளதாம். இதையடுத்து, ‘ஷென்ஸௌ-20’ குழுவினர் விரைவில் பூமிக்குத் திரும்ப உள்ளனர். முன்னதாக, விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த ஷென்ஸௌ-21 குழுவுக்கு முந்தைய குழுவினரால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்ட காட்சிகள் விடியோவாக வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

எலிகளால் ஆராய்ச்சி எதற்கு

27 கட்ட ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ள, ஷென்ஸௌ 20 குழு, தற்போது எலிகளையும் தங்களுடன் விண்வெளிக்கு எடுத்து சென்றுள்ளனர். அதாவது பூமிக்கு அப்பால், பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சிக்கு இந்த எலிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த குழு, 2 பெண் எலிகள் மற்றும் 2 ஆண் எலிகளை எடுத்து சென்றுள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு ஆராய்ச்சி முடிவுகள்

தற்பொது இந்த ஆராய்ச்சி சீன ஆராய்ச்சியாளர்களை மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 6 மாதம் கழித்த அவர்களின் வருகைக்கு பிறகே ஆராய்ச்சியின் வெற்றிகள் குறித்து அறியப்படும் என்றும் அதற்கு முன் அவர்களால் தெரிவிக்கப்படும் தகவல்கள் சீன ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.