most powerful Super El Niño ever recorded will cause major changes to the climate this year google
உலகம்

உலகை உலுக்கும் ‘சூப்பர் எல்-நினோ’ : ஒருபுறம் வெப்பம், மறுபுறம் பெரு வெள்ளம்! : விடுக்கப்பட்ட எச்சரிக்கை, விவரம்....

இதுவரை இல்லாத மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் சூப்பர் எல்-நினோ இந்த ஆண்டு பருவநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று, ஐநா சபை எச்சரித்துள்ளது.

Kannan

அச்சுறுத்தும் சூப்பர் எல்-நினோ

"Super El Niño" is an extreme phase of the naturally occurring El Niño–Southern Oscillation (ENSO) cycle, officially declared when sea surface temperatures in the equatorial Pacific Ocean rise \(2^{\circ }C\) or more above the long-term average :

பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ‘சூப்பர் எல்-நினோ’ உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பான அளவை விட \(1.5^{\circ }\text{C}\) முதல் \(2^{\circ }\text{C}\) அல்லது அதற்கு மேல் மிக அதிகமாக உயரும் ஒரு தீவிரமான மற்றும் அரிதான வானிலை மாற்ற நிகழ்வு ஆகும்.

இது உலகெங்கிலும் உள்ள பருவநிலை முறைகளைத் தலைகீழாக மாற்றக்கூடியது.நவீன காலத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படும் மின்னணு, மின்சார சாதனங்கள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால், ஏற்கனவே அதிகரித்துள்ள வெப்பம், இந்த ஆண்டு புதிய உச்சத்தை தொடப்போகிறது.

உலகை பாதிக்கும் இயற்கை சீற்றங்கள்

இந்த மாற்றம் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியாவில் கடும் வறட்சி, வெள்ளப்பெருக்கு காட்டுத் தீ, உணவு உற்பத்தி பாதிப்பு, விலை உயர்வு போன்ற பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது ஐநா.

தலைகீழாக மாறும் வானிலை

மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்கனவே பூமியின் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள் உலகளாவிய வானிலையை தலைகீழாக மாற்றும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பாவில் வெள்ளம்

அமெரிக்கா போன்ற நாடுகளில் பெருமழை மற்றும் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டவுள்ள இந்த எல்-நினோ, 2927ம் ஆண்டை உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது.

ஐநா அறிவுறுத்தல்

எல்-நினோ குறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா. அதை எதிர்கொள்ள உலக நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஈரான் போரால் ஏற்கனவே, உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இயற்கையால் ஏற்படும் இந்த பாதிப்பு, வளரும் நாடுகளுக்கு சவாலாகவே இருக்கும்.

====================